ப்ளீஸ் எங்களுக்காக இதை பண்ணுங்க.. உ.கோ இறுதிப்போட்டிக்கு முன்னர் தல தோனிக்கு ரசிகர்கள் – வைத்துள்ள கோரிக்கை

Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியானது நாளை மறுதினம் நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை நேரடியாக கண்டுகளிக்க உள்ளனர். அதேநேரத்தில் பல்வேறு பிரபலங்களும் நேரில் வந்து இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது இந்த இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் உச்சகட்ட பாதுகாப்பில் தயாராகி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை தோல்வியே சந்திக்காமல் இருக்கும் இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அந்த தருணத்திற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் நிச்சயம் இறுதிப்போட்டி நடைபெறும் நாள் அன்று அகமதாபாத் மைதானத்திற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு பிரபலங்கள் நேரில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான தல தோனிக்கு ரசிகர்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதாவது ஏற்கனவே அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போது பிரபலங்கள் நேரில் வந்து குவிந்திருந்தனர்.

- Advertisement -

அதேவேளையில் தோனி மட்டும் இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே எந்த ஒரு போட்டிக்கும் மைதானத்திற்கு வருகை தராமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியிலாவது தோனி நேரில் வந்து மைதானத்தில் இருந்து இந்திய அணியை உற்சாகப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்ற பிறகு தற்போது இறுதிப் போட்டி வரை வந்துள்ள இந்திய அணிக்கு மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு கைகளில் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலியின் 50 சதங்களை அந்த பாகிஸ்தான் பிளேயர் உடைப்பாரு.. கம்ரான் அக்மல் அதிரடி பேட்டி

இவ்வேளையில் நிச்சயம் கோப்பையை ரோகித் சர்மா கையில் ஏந்தும் தருணத்தை தோனி மைதானத்தில் இருந்து கண்டு களிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் தோனி மைதானத்தில் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அது இந்திய அணிக்கும் பாசிட்டிவான ஒரு விடயமாக இருக்கும் என்றும் அவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement