கே.எல் ராகுல் சதத்தால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் ஆப்பு. இந்திய அணியில் ஏற்பட்டுள்ள திருப்பம் – விவரம் இதோ

KL-Rahul-and-Shreyas
Advertisement

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டமானது கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 122 ரன்களும், கே.எல் ராகுல் 111 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பரான கே.எல் ராகுல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெறாத கே.எல் ராகுல் மூன்றாவது போட்டியான இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் முழு பிட்னஸ் உடன் இருப்பதனால் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று அணியின் தலைவர் ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.

அதன்படி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இடம் பிடித்திருந்த கே.எல் ராகுல் நான்காவது இடத்தில் களமிறங்கி 106 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 11 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் மூலம் தற்போது ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு ஆபத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே நான்காம் இடத்தில் விளையாடி வந்த அவருக்கு பதிலாக தற்போது அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட ராகுல் சதம் அடித்து அசத்தியுள்ளார். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் ஐந்தாவது இடத்தில் இடதுகை பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரும் இனி தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வீடியோ : வேட்டையை துவங்கிய பும்ரா – மேஜிக் பந்தால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் பாபர் அசாமை க்ளீன் போல்டாக்கிய பாண்டியா

இப்படி ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஒன்றாக விளையாடும் போது ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. அதேபோன்று கடந்த ஓராண்டாக காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த வேளையில் ஆசியக் கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பையும் அவர் தவற விட்டதால் இனி கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரே தொடர் வாய்ப்பினை பெறுவார்கள் என்றும் இதனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement