டெஸ்ட் டீம்ல இடம் வேணும்னா இதை நீங்க செய்ஞ்சே ஆகனும்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – பி.சி.சி.ஐ போட்ட கண்டிஷன்

Shreyas-Iyer
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஆனாலும் அவரது சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் சற்று மோசமாகவே இருப்பதினால் அவருக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இடம் வழங்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களை மிக சிறப்பாக எதிர்கொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்தில் தடுமாறி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வருவது அவரது குறையாக பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்து விளையாடிய அவர் திருப்தி அளிக்கும் வகையில் செயல்படாததால் இந்திய டி20 அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இம்மாதம் இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் இடம்பெற வேண்டுமெனில் அதற்கு முன்னதாக ரஞ்சி போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்தாக வேண்டும் என்ற உத்தரவு பிசிசிஐ சார்பில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் ஜனவரி 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ரஞ்சிக்கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக விளையாட இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆந்திரா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்த ரஞ்சி போட்டியில் அவர் விளையாடும் விதத்தின் அடிப்படையிலேயே அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போட்டியிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவரது இடத்திற்கு வேறு ஏதாவது இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் 5 பிளேயர்ஸ்னா அது இவங்கதான்.. மொயின் அலி தேர்வு – லிஸ்ட் இதோ

கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஞ்சி போட்டிகளில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 29 வயதான அவர் இந்திய அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 12 டெஸ்ட் போட்டிகள், 59 ஒருநாள் போட்டிகள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement