இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் 5 பிளேயர்ஸ்னா அது இவங்கதான்.. மொயின் அலி தேர்வு – லிஸ்ட் இதோ

Moeen-Ali
- Advertisement -

இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான மொயின் அலி கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை 68 டெஸ்ட் போட்டிகள், 138 ஒருநாள் போட்டிகள் மற்றும் 82 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் தொடரிலும் 2018-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 59 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மொயின் அலி ஒரு சிறப்பான பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் என்பது மட்டுமின்றி பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடக் கூடியவர். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் அவர் 6000-திற்க்கும் மேற்பட்ட ரன்களையும், 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வினை அறிவித்த மொயின் அலி தொடர்ச்சியாக உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி10 மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி10 லீக் போட்டிகளில் விளையாடி வரும் அவர் தற்போது ஒரு நேர்காணல் சந்திப்பில் கலந்து கொண்ட போது :

இந்திய வீரர்களில் ஆல்டைம் பெஸ்ட் 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களைப் பற்றி பேசியுள்ளார். அந்த வகையில் மொயின் அலி பேசியதாவது : ஐந்தாவது இடத்தில் நான் யுவராஜ் சிங்கை தேர்வு செய்கிறேன். ஏனெனில் யுவராஜ் சிங் ஃபார்மில் இருக்கும்போது அவரது பேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

- Advertisement -

நான்காவது இடத்தில் விரேந்திர சேவாக் : பந்துவீச்சாளர்களை சிதறடிப்பதில் சேவாக்கை போன்ற ஒரு பேட்ஸ்மேன் இல்லை என்று அவரை தேர்வு செய்துள்ளார். மூன்றாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் : கிரிக்கெட்டின் முழுமையான பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் மட்டுமே அவர் எப்பொழுதுமே ஒரு ஜாம்பவான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் கோலி டி20 அணிக்கு திரும்பிய உடனே முக்கிய அப்டேட்டை வெளியிட்ட – ஹார்டிக் பாண்டியா

இரண்டாவது இடத்தில் விராட் கோலி : கோலியை கிரிக்கெட்டின் குழந்தை என்றே சொல்ல வேண்டும். உலக ஜாம்பவான்களில் அவரும் ஒருவர் என்பதை அவர் ஏற்கனவே நிரூபித்து விட்டார். நம்பர் ஒன் மகேந்திர சிங் தோனி : என்னை பொறுத்தவரை தோனி தான் இந்தியாவின் நம்பர் ஒன் சிறந்த வீரர். ஏனெனில் அவர் இந்திய அணிக்காக எல்லா விதமான கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார் என மொயின் அலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement