ரோஹித் சர்மா மற்றும் கோலி டி20 அணிக்கு திரும்பிய உடனே முக்கிய அப்டேட்டை வெளியிட்ட – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் டி20 ஃபார்மெட்டிற்கு திரும்பி உள்ளனர்.

கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் விளையாடிய அவர்கள் இருவரும் அந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஓராண்டாக ஓய்வு எடுத்துக் கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலேயே கவனம் செலுத்தி வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தாங்கள் டி20 உலக கோப்பையில் விளையாட தயாராக இருக்கிறோம் என்று இருவருமே விருப்பம் தெரிவித்ததால் அவர்களுக்கு இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் டி20 உலககோப்பை தொடரின் இந்திய அணி கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா சமீப காலமாகவே அடிக்கடி காயத்தில் சிக்கி வருவதால் அவர் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் கேப்டனாக இருப்பாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. அதோடு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

- Advertisement -

இதனால் அவரது நிலை இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 அணிக்கு கம்பேக் கொடுத்த அடுத்த நாளே தற்போது ஹார்டிக் பாண்டியா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஒரு முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அந்த வகையில் : காயத்திலிருந்து விடுபட்ட அவர் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டு தான் களத்திற்கு திரும்புவதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 10 ரன்ஸ் கூடவா தாண்டல.. முதல்ல உங்கள ட்ராப் பண்ணனும்.. ஹர்மன்ப்ரீத்தை விளாசும் ரசிகர்கள்

மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் முழு உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் தொடர்ச்சியாக இந்திய அணியில் பயணிப்பதோடு சேர்த்து டி20 உலக கோப்பை தொடருக்கான கேப்டன் பதவிக்கும் போட்டியிடுவார் என்று உறுதி.

Advertisement