10 ரன்ஸ் கூடவா தாண்டல.. முதல்ல உங்கள ட்ராப் பண்ணனும்.. ஹர்மன்ப்ரீத்தை விளாசும் ரசிகர்கள்

HarmanPreet Kaur 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே வென்ற இந்திய மகளிரணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அதனால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 9ஆம் தேதி நவி மும்பையில் நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் சுமாராக விளையாடி 147/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. சபாலி வர்மா 26, மந்தனா 29, ஜெமிமா ரோட்ரிக்கர்ஸ் 2, கேப்டன் ஹெர்மன்ப்ரீத் கௌர் 3, தீப்தி ஷர்மா 14 என முக்கிய வீராங்கனைகள் அனைவரும் இந்தியாவுக்கு பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக ரிச்சா கோஸ் 34 (28) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

சுமாரான கேப்டன்:
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக அனபேல் சதர்லேண்ட், ஜார்ஜியா வரஹம் தலா 2 விக்கெட்களை எடுத்தார்கள். அதைத்தொடர்ந்து 148 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் அலிசா ஹீலி 55 (38), பெத் மூனி 52* (45) ரன்கள் அடித்து 18.4 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கப்பட்ட இந்தியாவுக்கு அதிகபட்சமாக பூஜா வஸ்திரக்கார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியாமல் வரலாற்றிலேயே முதல் முறையாக 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றும் ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

முன்னதாக இத்தொடரின் 3 போட்டிகளில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் முறையே 3, 6, 3 என மொத்தம் 12 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். சொல்லப்போனால் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வரும் அவர் கடைசி 7 வெள்ளைப்பந்து போட்டிகளில் முறையே 3, 6, 3, 5, 9, 6*, 9 என வெறும் 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு முறை கூட ஒரு போட்டியில் 10 ரன்களை தாண்டியதில்லை. மேலும் கடைசி 8 டி20 போட்டிகளில் அவர் 89 ரன்களும் 6 ஒருநாள் போட்டிகளில் 88 ரன்களும் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறார்.

இதையும் படிங்க: 148 ரன்ஸ்.. 1 அடிக்கு 2 பதிலடி கொடுத்த ஆஸி.. சொந்த ஊரில் இந்திய மகளிரணி பரிதாப சாதனை

அந்த வகையில் சமீபத்திய வருடங்களாகவே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாராக செயல்பட்டு வரும் அவர் கடந்த வருடம் வங்கதேச அணியினரை கீழ்த்தரமாக பேசி தடை பெற்று இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார். எனவே இந்திய மகளிரணி முன்னோக்கி செல்வதற்கு முதலில் இவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அணியிலிருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement