யுவராஜ் சிங்கின் 2011 உ.கோ சாதனையை உடைத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. மிடில் ஆர்டரில் புதிய அபாரமான சாதனை

Shreyas Iyer 5
Advertisement

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பெங்களூருவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய 411 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, ராகுல் 102 ரன்கள் எடுத்தனர். இதன் வாயிலாக உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்த நிலையில் நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 2 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

ஸ்ரேயாஸின் சாதனை:
அதை தொடர்ந்து சேசிங் செய்த நெதர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறுதல் வெற்றி கூட பெறாமல் வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமன்ரு 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், ஜடேஜா, பும்ரா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

அதனால் 9 லீக் போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது. இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 10 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 128* (94) ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி வரும் அவர் இதுவரை 9 போட்டிகளில் 421* ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக மிடில் ஆர்டரில் 4வது இடத்தில் களமிறங்கி அவர் 421* ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் 4, 5 போன்ற மிடில் ஆர்டர் இடங்களில் களமிறங்கி 362 ரன்கள் குவித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: ஆஸிக்கு எதிரான மேட்ச் மாதிரியே இருந்துச்சு.. முதல் உ.கோ சதமடிக்க காரணம் அது தான்.. ஆட்டநாயகன் ஷ்ரேயாஸ் பேட்டி

மேலும் இத்தொடரில் 4 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ள அவர் ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த 2வது இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யுவராஜ் சிங் : 5 (2011)
2. ஸ்ரேயாஸ் ஐயர் : 4* (2023)
3. சச்சின் டெண்டுல்கர் : 3 (1992)
3. சுரேஷ் ரெய்னா : 3 (2015)

Advertisement