ஷார்ட் பால் வீக்னெஸ் போன்ற விமர்சனத்தை உடைத்த ஸ்ரேயாஸ்.. சச்சினை முந்தி 2 அபார சாதனை

Shreyas Iyer 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லாமல் ஓய மாட்டோம் என்ற வகையில் அசத்தி வருகிறது.

இந்த வெற்றிகளில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சீனியர்களாக மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நிகராக ஸ்ரேயாஸ் ஐயரும் கடந்த 3 போட்டிகளில் முறையே பாகிஸ்தான் வங்கதேசம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 53*, 82, 77 ரன்கள் அடித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

விமர்சனமும் சாதனை:
முன்னதாக 2019 உலகக்கோப்பைக்கு பின் 4வது இடத்தில் விளையாடுவதற்காக தேடி வந்த நிறைய பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே கடந்த 2022 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்து தீர்வாக உருவெடுத்தார். ஆனாலும் அதன் பின் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து 2023 ஆசிய கோப்பையில் களமிறங்கியும் முழுவதுமாக விளையாடவில்லை.

அத்துடன் லேசான காயத்தை சந்தித்திருந்த அவர் 6 மாதங்களுக்கு மேல் எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பதால் நேரடியாக உலகக்கோப்பையில் 4வது இடத்தில் விளையாடக்கூடாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாமல் கூட இருந்த திலக் வர்மாவை களமிறக்கலாம் என்றும் பேச்சுக்கள் காணப்பட்டன. இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் சதமடித்ததால் உலக கோப்பையில் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

ஆனால் அதிலும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் கொஞ்சமும் முன்னேறாமல் கேட்ச் கொடுத்து அவுட்டான அவரை நீக்குமாறு நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் முக்கிய நேரங்களில் அரை சதமடித்து தன் மீத்தனை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: அவர் மட்டும் தான் டீமுக்காக ஆடுறாரு.. ஆனா விராட் கோலி பக்கா ஃசெல்பிஷ்.. ஹபீஸ் தடாலடி விமர்சனம்

அந்த வகையில் இதுவரை 293 ரன்கள் அடித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 4வது இடத்தில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1992 உலகக் கோப்பையில் சச்சின் 229 ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். மேலும் 3 அரை சதங்களுடன் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் நம்பர் 4வது இடத்தில் களமிறங்கி அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1992இல் சச்சின், 1999இல் அஜய் ஜடேஜா, 2011இல் யுவராஜ் சிங் தலா 2 முறை 50+ ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement