
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை முக்கிய வீரராக இடம்பிடித்து விளையாடி வருகிறார். ஏனெனில் நீண்ட காலமாகவே இந்திய ஒருநாள் அணியில் பிரச்சனைக்கு உரிய இடமாக பார்க்கப்பட்டு வந்த நான்காவது இடத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தொடர்ச்சியாக அவரே அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்த ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரின் முதல் போட்டியில் 59 ரன்கள் எடுத்த அவர் இரண்டாவது போட்டியில் 44 ரன்கள் குவித்திருந்தார்.
பின்னர் கடந்து சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 64 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இப்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அரைசதங்களை விளாசி அவர் தற்போது மிகச் சிறப்பான பார்மையும் வெளிகாட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது போட்டியில் அடித்த அரைசதத்தின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரது மாபெரும் சாதனை ஒன்றிணையும் முறியடித்து முதலிடத்திற்கு சென்றுள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அடித்த சதத்தின் மூலம் இதுவரை 25 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை 25 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை அதிவேகமாக குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் விராட் கோலி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர். அவர்கள் இருவருமே 68 இன்னிங்ஸ்களில் விளையாடிய போது 25 முறை 50 ரன்களை கடந்திருந்தனர். ஆனால் தற்போது அந்த சாதனையை தகர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் தனது 60-வது இன்னிங்ஸ்லேயே 25 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : அம்பானியின் ஆப்பு? ஐபிஎல் 2025 போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது.. வெளியான கட்டண பட்டியல்
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் கே.எல் ராகுலும், ஐந்தாவது இடத்தில் ஷிகர் தவானும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.