இலங்கை – இந்தியா பிங்க் டெஸ்ட் : வரலாற்றில் தனது பெயரை பொறித்த ஷ்ரேயஸ் ஐயர் சூப்பர் சாதனை

Iyer
- Advertisement -

இந்தியா – இலங்கை அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று மொகாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இந்த தொடரின் 2-வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் இரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடப்படும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Rohit

- Advertisement -

கலக்கிய ஷ்ரேயஸ் ஐயர்:
இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு மயங்க் அகர்வால் 4, ரோகித் சர்மா 15, ஹனுமா விஹாரி 31, விராட் கோலி 23 என டாப் வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் இலங்கையின் அற்புதமான சுழல் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த போதிலும் இலங்கையின் சுழலில் சிக்கினார்.

பொதுவாகவே 3வது நாளுக்கு பின் தான் பிட்ச் சுழல் பந்து வீச்சுக்கு அதிகமாக கைகொடுக்கும். ஆனால் இந்த பெங்களூரு மைதானத்தில் முதல் நாளன்றே பிட்ச் தாறுமாறாக சுழன்று இந்தியாவிற்கு கடும் சவாலை கொடுத்தது. இதனால் ஒருபுறம் இதர இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் வேறு ஏதோ ஒரு மைதானத்தில் விளையாடுவதை போல அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடினார்.

விக்கெட் போனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பவுண்டரிகளை விளாசிய அவர் 98 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 92 ரன்கள் எடுத்திருந்தபோது சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். இவரின் அதிரடியான ஆட்டத்தால் தப்பிய இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

வெற்றிபெறும் நிலையில் இந்தியா:
இப்படி தாறுமாறாக சுழலும் பிட்ச்சில் இந்தியாவாலேயே தாக்குபிடிக்க முடியவில்லை. அப்படியிருக்க இலங்கையால் மட்டும் முடியுமா? ஆம் அதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இலங்கை தனது முதல் இன்னிங்சில் வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணிக்கு அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 41 ரன்கள் எடுத்தார்.

shreyas iyer 3

இதன் காரணமாக 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்தியாவுக்காக மீண்டும் கடினமான பிட்சில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 9 பவுண்டரிகள் உட்பட 67 ரன்கள் குவித்தார். அவருடன் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 50 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 447 என்ற கடினமான இலக்கை துரத்திய வரும் இலங்கை 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 28/1 என்ற நிலையில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -

பெயரை பொறித்த ஷ்ரேயஸ் ஐயர்:
முன்னதாக இந்த போட்டியில் இதர இந்திய வீரர்கள் தடுமாறிய போது தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்து இந்தியாவுக்கு கை கொடுத்தார். இதன் வாயிலாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு பின் பெற்றார். குறிப்பாக முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து 92 ரன்கள் எடுத்த அவர் 2-வது இன்னிங்சிலும் அபாரமாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்து 67 ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஓய்வறையில் காத்திருந்து இலங்கை வீரரை வாழ்த்திய டிராவிட் மற்றும் விராட் கோலி – நெகிழ்வைத்த தருணம்

இதற்கு முன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர இந்திய வீரர்கள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 2 இன்னிங்சுகளிலும் அரை சதம் அடித்தது கிடையாது. ஸ்ரேயாஸ் அய்யர் தான் இந்த சாதனை படைத்த முதல் இந்தியராக தனது பெயரை வரலாற்றில் பொறித்துள்ளார். பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. டேரன் ப்ராவோ, பாகிஸ்தானுக்கு எதிராக, துபாய், 2016.
2. ஸ்டீவ் ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிராக, பிரிஸ்பேன், 2019.
3. மார்னஸ் லபுஸ்ஷேன், நியூசிலாந்துக்கு எதிராக, பெர்த், 2019.
4. மார்னஸ் லபுஸ்ஷேன், இங்கிலாந்துக்கு எதிராக, அடிலைட், 2021.
5. ஷ்ரேயஸ் ஐயர், இலங்கைக்கு எதிராக, பெங்களூரு, 2022*.

Advertisement