ஓய்வறையில் காத்திருந்து இலங்கை வீரரை வாழ்த்திய டிராவிட் மற்றும் விராட் கோலி – நெகிழ்வைத்த தருணம்

Lakmal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாம் நாளான நேற்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் முன்னாள் கேப்டன் விராத் கோலி ஆகியோர் இலங்கை வீரர் ஒருவருக்கு கொடுத்த வரவேற்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

lakmal 2

- Advertisement -

அதன்படி இந்த நிகழ்வு நடக்க காரணம் யாதெனில் : இந்த இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக தான் இந்த தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மல் அறிவித்திருந்தார். அதன்படி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்ததோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.

2009ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தற்போது வரை 70 டெஸ்ட் போட்டிகள், 86 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 171 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 109 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

lakmal 1

இந்நிலையில் பெங்களூரு டெஸ்ட் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது கடைசியாக பந்து வீசி விட்டு வெளியே வந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் முன்னாள் கேப்டன் விராத் கோலியும் ஓய்வறையில் அவரின் வருகைக்காக காத்திருந்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

- Advertisement -

இப்படி எதிர் அணி வீரராக இருந்தாலும் அனுபவ வீரரின் ஓய்வு முடிவை மதித்து அவர்களை இவர்கள் இருவரும் பாராட்டிய இந்த விடயம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா அடித்த சிக்ஸரால் பெங்களூரு ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாபம் – வெளியான மருத்துவ அறிக்கை

அதோடு மட்டுமின்றி தான் கடைசியாக விளையாடிய இந்த போட்டியில் பந்துவீசி விட்டு அவர் வெளியேறும் போது இலங்கை அணியைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் அவருக்கு இருபுறமும் நின்று அரண் அமைத்து கைத்தட்டி பாராட்டி பிரியா விடை கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement