- Advertisement -
ஐ.பி.எல்

என் மீது அந்த நம்பிக்கை வச்சதுக்கு நன்றி.. பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு நேற்று ஐபிஎல் நிர்வாகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக தற்போதே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிப்பு :

இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்த 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் பல வீரர்களின் அணி மாற்றம் நிகழ்த்தப்பட்டது.

- Advertisement -

அதோடு சில அணிகளின் கேப்டனாக இருந்த வீரர்கள் வெளியேறி மற்ற அணிகளுக்கு மாறியதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இரண்டாவது அதிகபட்ச விலைக்கு அதாவது 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியின் கேப்டன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக அவரையே அந்த அணியின் நிர்வாகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஓராண்டாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றிய அவர் அடுத்ததாக மும்பை அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரையும், ரஞ்சி தொடரையும் வென்றிருந்தார். இதன் காரணமாக அவருக்கு பஞ்சாப் அணியானது இந்த கேப்டன் பதிவியை வழங்கியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பதவியேற்ற அவர் இது குறித்து பேசியதாவது :

இதையும் படிங்க : அந்த தொடர் வரைக்கும் நானே கேப்டனா இருக்கேன்.. பி.சி.சி.ஐ மீட்டிங்கில் கறாராக பேசிய – ரோஹித் சர்மா

உண்மையிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகம் என்மீது நம்பிக்கை வைத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். மீண்டும் ரிக்கி பாண்டிங்குடன் பணியாற்ற இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. எங்களுடைய பஞ்சாப் அணியானது தற்போது மிகவும் வலிமையான அணியாக இருக்கிறது. வீரர்களும் சரியான கலவையில் இருப்பதால் நிச்சயம் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றி முதல் கோப்பையை பெற்று தருவேன் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -