அந்த தொடர் வரைக்கும் நானே கேப்டனா இருக்கேன்.. பி.சி.சி.ஐ மீட்டிங்கில் கறாராக பேசிய – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பூஜ்யத்திற்கு மூன்று (0-3) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

கேப்டனாக இன்னும் சில மாதங்கள் நீடிப்பேன் :

இதன் காரணமாக இந்திய அணியின் மீதும், கேப்டன் ரோஹித் சர்மாவின் பதவி மீதும் அதிகளவு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர் அடுத்தடுத்து வர இருக்கின்றன.

- Advertisement -

இவ்வேளையில் தொடர் தோல்விகள் காரணமாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு புதிய கேப்டனாக பும்ராவை நியமிக்க வேண்டும் என்ற பேச்சுக்களும் பரவலாக இந்திய கிரிக்கெட்டை சுற்றி உலா வருகின்றன.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக பிசிசிஐ கடந்த சனிக்கிழமை அன்று நடத்திய மீட்டிங் ஒன்றில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அந்தவகையில் நடந்த மீட்டிங்கின் போது ரோஹித் சர்மா தான் இன்னும் சில மாதங்கள் வரை கேப்டனாக இருக்க விரும்புவதாக பிசிசிஐ-யிடம் கறாராக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி முடியும் வரை தான் கேப்டனாக இருக்க விரும்புவதாகவும் அதன் பிறகு அடுத்த முடிவை எடுக்கலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஜடேஜாவுக்காக நட்புக்காக பொறுத்துகிட்ட அஸ்வினுக்கு.. கம்பீர் செஞ்ச அவமானமே ஓய்வுக்கு காரணம்.. பரத் அருண்

இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை ரோஹித் சர்மாவே கேப்டனாக நீடிப்பார் என்றும் அதன்பிறகு அடுத்த கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா அடுத்த நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது ரோகித் சர்மாவிற்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement