அவருக்கு பதிலா நான் பெஞ்சில் உட்காரட்டுமா, செய்தியாளரின் கேள்விக்கு ராகுல் காட்டமான பதில் – முழுவிவரம் இதோ

Rahul
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா முக்கியமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட செல்லாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது. இத்தனைக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் இந்த தோல்வி கிடைத்துள்ளது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்துகிறது. அந்த நிலையில் இத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 212/2 ரன்களை எடுத்து பின்னர் 101 ரன்கள் வித்யாசத்தில் வென்றது.

அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி ஆப்கானிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 12 பவுண்டரி 6 சிக்சருடன் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து 122* (61) ரன்கள் குவித்தார். அத்துடன் 2019க்குப்பின் சுமார் 3 வருடங்களாக அடம் பிடித்த தன்னுடைய 71வது சர்வதேச சதத்தையும் விளாசிய அவர் அதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கேட்கும் அளவுக்கு தினந்தோறும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட அதே முன்னாள் வீரர்களை கைதட்டி பாராட்ட வைத்தார்.

- Advertisement -

பெஞ்சில் உட்காரட்டுமா:
முன்னதாக இந்த போட்டியில் ஏற்கனவே கோப்பை பறிபோய் விட்டதால் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுத்த நிலையில் துணை கேப்டன் கேஎல் ராகுல் அணியை வழி நடத்தினார். மேலும் ரோகித் சர்மாவின் இடத்தில் களமிறங்கிய விராட் கோலி யாருமே எதிர்பாராத வகையில் அட்டகாசமாக பேட்டிங் செய்து 1020 நாட்கள் கழித்து சதமடித்து விமர்சனங்களை தூள் தூளாக்கினார். அதை பார்த்த நிறைய ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் தொடக்க வீரராக களமிறங்கி வெற்றிகரமாக செயல்பட்ட விராட் கோலி விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க தொடங்கியுள்ளனர்.

அதை நேரடியாக நேற்றைய போட்டி முடிந்த பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேஎல் ராகுலிடம் ஒரு செய்தியாளர் கேள்வியாக எழுப்பினார். அதற்கு பதிலளித்த கேஎல் ராகுல் ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினால் நான் பெஞ்சில் அமரட்டுமா என்று வெளியில் சிரித்துக்கொண்டே உள்ளுக்குள் காட்டமான பதில் கொடுத்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சதமடித்தால் என்ன? பேசாமல் நான் பெஞ்சில் அமரட்டுமா? விராட் கோலி பெரிய ரன்களை எடுத்தது அணிக்கு மிகப்பெரிய போனஸாகும். அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. ஒரு அணியாக ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்படுவது முக்கியமானதாகும்”

- Advertisement -

“இதுபோல் 2 – 3 இன்னிங்ஸ்களை விளையாடினால் தாமாக உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைத்துவிடும். மேலும் விராட் கோலி நீண்டகாலம் பேட்டிங் செய்வதை பார்க்கும் உங்களுக்கு ஓப்பனிங்கில் களமிறங்கினால் தான் சதமடிப்பார் என்றல்லாமல் 3-வது இடத்தில் களமிறங்கினாலும் சதமடிப்பார் என்பது தெரியும். எனவே இவை அனைத்தும் ஒரு வீரர் எந்த மாதிரியான வேலையை செய்கிறார் என்பதைப் பொறுத்தது” என்று கூறினார்.

ஆனால் அவரது இந்த பதிலை கேட்கும் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பேசாமல் பெஞ்சில் அமருங்கள் என்று வெளிப்படையாகவே பதிலளிக்கின்றனர். ஏனெனில் 2019 முதல் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக விளையாடி வரும் கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் 17 கோடி என்ற உச்சகட்டத்தை எட்டியுள்ள தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சமீப காலங்களில் அணியின் வெற்றியை பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார்.

இதையும் படிங்க : INDvsAFG : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் – முகமது நபி வருத்தம்

குறிப்பாக ஐபிஎல் தொடருக்குப் பின் காயத்தால் 2 மாதங்கள் கழித்து ஜிம்பாப்வே தொடரில் கம்பேக் கொடுத்த அவர் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டானார். அதைவிட இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டான அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியை தவிர்த்து முக்கிய போட்டிகளில் வெற்றி பெறும் அளவுக்கு விளையாடவில்லை. அதிலும் ஹாங்காங் போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்களை எடுத்ததே ரசிகர்களின் இந்த பதிலுக்கு காரணமாக அமைகிறது.

Advertisement