INDvsAFG : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் – முகமது நபி வருத்தம்

Mohammad-Nabi
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற “சூப்பர் 4” சுற்றின் ஐந்தாவது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்து இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்த வேளையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

INDvsAFG

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய விராத் கோலி அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 122 குவித்து அசத்தினார்.

பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

Virat Kohli

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக இப்ராஹீம் ஜார்டான் 64 ரன்களை குவித்தார். அவரை தவிர வேறு எந்த வீரரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தானின் கேப்டன் முகமது நபி கூறுகையில் : பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இரவு நாங்கள் அடைந்த தோல்வியே எங்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை.

- Advertisement -

அதற்குள் நேராக அடுத்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அடுத்த நாளே விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்த போட்டிக்கு நாங்கள் மனரீதியாகவும், சரி உடல் ரீதியாகவும் சரி தயாராகவே இல்லை. இருந்தாலும் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். எங்கள் அணியின் வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கோலி மற்றும் ராகுல் ஆகியோரது சிறப்பான துவக்கத்தை தடுக்க முடியவில்லை.

இதையும் படிங்க : IND vs AFG : ஆப்கானிஸ்தானை அதிரவிட்ட புவி – கம்பேக் கொடுத்து படைத்த அபாரமான சாதனைகளின் பட்டியல் இதோ

இந்த போட்டியில் நாங்கள் பல கேட்ச்களை தவறவிட்டோம். அதுமட்டும் இன்றி பேட்டிங் யூனிட்டிலும் எங்களால் பெரிய அளவு சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த தொடரில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியுடன் ஆரம்பித்து சற்று மோசமாக முடித்துள்ளோம். ஆனாலும் நாங்கள் இந்த தொடர் முழுவதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடி உள்ளதாக உணர்கிறோம் என நபி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement