IND vs AFG : ஆப்கானிஸ்தானை அதிரவிட்ட புவி – கம்பேக் கொடுத்து படைத்த அபாரமான சாதனைகளின் பட்டியல் இதோ

Bhuvneswar Kumar INDIA
- Advertisement -

2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை கண்டாலும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அதனால் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்பாக செப்டம்பர் 8ஆம் தேதியான நேற்று தன்னுடைய கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 212/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக பேட்டிங் செய்து 12 பவுண்டரி 6 சிக்சர்களுடன் சதமடித்து 122* (61) ரன்களை குவித்தார்.

Viart Kohli 122

- Advertisement -

அதனால் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் 1020 நாட்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து ஒட்டுமொத்தமாக தன்னுடைய 71வது சதத்தையும் விளாசி அத்தனை விமர்சனங்களையும் அடித்து நொறுக்கினார். அதை தொடர்ந்து 213 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 111/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.

திரும்பிய கிங்:
இத்தொடரில் இந்தியா கோப்பையை தக்க வைக்க தவறினாலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பி சதமடித்து விமர்சனங்களை அடித்து நொறுக்கியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனையும் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற முஹம்மது நபியின் உலக சாதனையையும் சமன் செய்து அசத்தினார். அவருக்கு நிகராக இப்போட்டியில் பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார்.

Virat Kohli Bhuvaneswar Kumar IND vs AFG

புவியின் கம்பேக்:
பொதுவாகவே துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கும் புவனேஸ்வர் குமார் இந்த தொடரிலும் பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் சூப்பர் 4 சூற்றில் 19வது ஓவரில் முறையே 25, 19 ரன்கள் எதிரணிக்கு தேவைப்பட்ட போது முறையே 19, 11 ரன்களை வாரி வழங்கிய அவர் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் விமர்சனங்களையும் சந்தித்த அவர் அந்த அனைத்துக்கும் பதிலடியாக இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே ஹசரதுல்லா, குர்பாஸ் ஆகிய 2 தொடக்க வீரர்களையும் டக் அவுட் செய்து ஆரம்பத்திலேயே மிரட்டினார்.

- Advertisement -

புதிய பந்தை ஸ்விங் செய்வதில் கில்லாடியான புவனேஸ்வர் குமார் நேற்றைய போட்டியில் அந்த திறமையை உச்சபட்சமாக வெளிப்படுத்தி 4 ஓவரில் 1 மெய்டன் ஓவர் உட்பட வெறும் 4 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை 1.00 என்ற அற்புதமான எக்கனாமியில் பந்து வீசினார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் மிகவும் குறைந்த ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பாகிஸ்தானின் உமர் குல் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Bhuvaneswar Kumar

அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 4, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2022*
2. உமர் குல் : 6, நியூசிலாந்துக்கு எதிராக, 2009
3. உமர் குல் : 6, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2013
4. லசித் மலிங்கா : 6, நியூசிலாந்துக்கு எதிராக, 2019

- Advertisement -

2. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியின் 2 ஓப்பனிங் பேட்ஸ்மேன்களையும் டக் அவுட் செய்த முதல் இந்திய பவுலர், டி20 கிரிக்கெட்டில் 2 முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையும் படைத்தார்.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

3. அத்துடன் டி20 கிரிக்கெட்டில் முழுமையாக 4 ஓவர்களை வீசிய பின் குறைந்த ரன்களை கொடுத்த இந்திய பவுலர் என்ற அஷ்வினின் சாதனையையும் உடைத்தார். அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 4, 2022*
2. ரவிச்சந்திரன் அஷ்வின் : 5, இலங்கைக்கு எதிராக, 2016

- Advertisement -

4. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 31*, 2022இல்
2. ஜஸ்பிரித் பும்ரா : 28*, 2016இல்

இதையும் படிங்க : அது வேற வாய், விராட் கோலி விஷயத்தில் ஒரே வாரத்தில் பல்டி அடித்த கௌதம் கம்பீர் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

5. டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் (15 விக்கெட்கள், 2022இல்) என்ற ஆசிஷ் நெக்ராவின் (13 விக்கெட்கள், 2016இல்) சாதனையையும் தகர்த்தார்.

6. அதைவிட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற சஹாலின் ஆல்-டைம் சாதனையையும் தகர்த்தார். அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 84*
2. யுஸ்வென்ற சஹால் : 83
3. ஜஸ்பிரித் பும்ரா : 69

Advertisement