1 லட்சம் ரன்ஸ் அடிச்சாலும் அது இருக்கும்.. விராட் கோலி ரசிகர்களுக்கு சோயப் மாலிக் பதிலடி.. நடந்தது என்ன?

Shoaib Malik 2
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை 442* ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக முக்கிய பங்காற்றி வருகிறார்.

இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி அவ்வப்போது தடுமாறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த நிலையில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவருமே ஆஃப் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் போது தங்களின் முன்னங்காலை நேராக எடுத்துச் செல்லாமல் குறுக்கு வாக்கில் எடுத்துச் செல்வதே இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்தார்.

- Advertisement -

கலாய்த்த ரசிகர்கள்:
அத்துடன் இதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காலை எப்படி நகர்த்த வேண்டும் என்பதைப் பற்றிய விளக்கமான பயிற்சியையும் கொடுத்தார். அதைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் “விராட் கோலி எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. அப்படியே அமிதாப் பச்சன் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்” என்று சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.

ஏனெனில் இதே உலகக் கோப்பையில் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பாபர் அசாம் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே பாகிஸ்தானின் தோல்விகளுக்கு காரணமாகும் வகையில் சுமாராக செயல்பட்டு வருகிறார். அது போக கடந்த 15 வருடங்களில் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் எதிர்கொண்டு 26,000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள விராட் கோலிக்கு கண்டிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கான டெக்னிக்கை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

இந்நிலையில் உலகில் ஒரு லட்சம் ரன்களை அடிக்கும் பேட்ஸ்மேனுக்கு கூட கண்டிப்பாக ஒரு வீக்னஸ் இருக்கும் என்று ரசிகர்களின் கிண்டல்களுக்கு சோயப் மாலிக் பதில் அளித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது. “இந்த உலகில் 1 லட்சம் ரன்கள் அடித்தாலும் வீக்னஸ் இல்லாத பேட்ஸ்மேன் இருக்க முடியாது. நீங்கள் (ரசிகர்கள்) என்னுடைய கருத்தை புரிந்து கொள்ளவில்லை”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : முதல் முறையாக வெளிநாட்டில் நடக்கும் வீரர்கள் ஏலம்.. தேதி – இடம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு

“அதாவது எந்த பேட்ஸ்மேனும் காலை முன்னோக்கி குறுக்கே நகர்த்தினால் சுழலை சிறப்பாக எதிர்கொள்வதற்கு தடுமாறுவார்கள். அதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு கேட்டால் என்னால் நிறைய ஜாம்பவான்களின் பெயர்களை சொல்ல முடியும். நீங்கள் காலை குறுக்கே நகர்த்தும் போது கண்டிப்பாக பந்தை எளிதாக எதிர்கொள்ள முடியாது. அதனால் தெளிவாக பந்தை எதிர்கொள்வதற்கு சிரமம் ஏற்படும் என்று நான் சொன்னேன். அவ்வளவு தான். நானும் எப்போதுமே விராட் கோலியை பாராட்டி வருகிறேன். அவர் சிறந்த வீரர்” என்று கூறினார்.

Advertisement