ஒன்றல்ல, இரண்டல்ல.. ஸ்பாட் ஃபிக்சிங் செய்தாரா சோயப் மாலிக்? மோசமான உலக சாதனையால் ரசிகர்கள் சந்தேகம்

Shoaib Malik
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வர்ணையாளராக செயல்பட்டு வருகிறார். அந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவின் முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை கழற்றி விட்ட அவர் சனா ஜாவேத் எனும் பாகிஸ்தான் சினிமா நடிகை திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பை வெளியிட்டார்.

இருவருக்குமே திருமணமாகி பல வருடங்கள் கடந்து குழந்தை இருக்கும் நிலையில் அவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சொல்லப்போனால் சானியா மிர்சாவையே 2வதாக திருமணம் செய்திருந்த அவர் தற்போது 3வது திருமணம் செய்துள்ளார். அந்த வகையில் திருமணத்தை முடித்துக் கொண்டு தற்போது அவர் வங்கதேசத்தில் நடைபெறும் 2024 பிபிஎல் தொடரில் விளையாடுகிறார்.

- Advertisement -

விளாசும் ரசிகர்கள்:
அதில் கடந்த போட்டியில் 17 ரன்கள் அடித்த அவர் டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனை படைத்தார். இந்நிலையில் பிபிஎல் தொடரில் நேற்று பரிசால் மற்றும்ஃ குல்னா டைகர்ஸ் ஆகிய அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. அதில் பவர் பிளே ஓவரில் சோயப் மாலிக்கை பரிசால் கேப்டன் கேப்டன் தமீம் இக்பால் அழைத்தார்.

ஆனால் அந்த ஓவரில் மிகப்பெரிய நோபால் போட்ட அவர் அதற்காக மீண்டும் வழங்கப்பட்ட ஃப்ரீ ஹிட்டிலும் நோபால் போட்டார். அதற்காக மீண்டும் வழங்கப்பட்ட ஃபிரீ ஹிட்டில் மறுபடியும் நோபால் போட்ட அவர் தொடர்ந்து 3 நோபால்களை வீசி மொத்தமாக ஓவரில் 18 ரன்கள் கொடுத்தது ரசிகர்களை தற்போது சந்தேகமடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் பொதுவாகவே ஸ்பின்னர்கள் நோபால் வீசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வல்லுனர்கள் விமர்சிப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒன்றுக்கு இரண்டல்ல 3 நோபால்களை தொடர்ந்து போட்ட அவர் கடைசியில் தம்முடைய பரிசால் அணி தோற்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் சோயப் மாலிக் ஸ்பாட் ஃபிக்சிங் செய்தாரா என்று தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகைப்பட ஆதாரத்துடன் பதிவிட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: விராட், ரோஹித்துக்கு இடமில்லை.. 2023ஆம் ஆண்டின் கனவு டெஸ்ட் அணியை வெளியிட்ட ஐசிசி.. 2 இந்தியர்களுக்கு இடம்

சொல்லப்போனால் ஏற்கனவே வரலாற்றில் சல்மான் பட், முகமது அமீர், முகமத் ஆசிப் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பணத்தை வாங்கிக் கொண்டு இப்படி நோபால்களை போட்டு ஃபிக்ஸிங் செய்தது உலகிற்கு அம்பலமானது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 3 நோபால்களை போட்ட முதல் வீரர் என்ற மோசமான சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவரும் பணத்திற்காக வங்கதேச தொடரில் ஃபிக்சிங் செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் சந்தேகப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement