விராட், ரோஹித்துக்கு இடமில்லை.. 2023ஆம் ஆண்டின் கனவு டெஸ்ட் அணியை வெளியிட்ட ஐசிசி.. 2 இந்தியர்களுக்கு இடம்

- Advertisement -

கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் 2023 காலண்டர் வருடத்தில் அசத்திய உலகின் சிறந்த வீரர்களைக் கொண்ட கனவு 11 பேர் அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. சொல்லப்போனால் கடந்த வருடம் உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானித்த சாம்பியன்ஷிப் ஃபைனல் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

அந்த நிலைமையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெறாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருப்பினும் 2023 காலண்டர் வருடத்தில் 1210 ரன்கள் குவித்து அசத்திய ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா முதல் துவக்க வீரராகவும் 607 ரன்கள் அடித்த இலங்கையின் திமுத் கருணரத்னே 2வது துவக்க வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

கனவு டெஸ்ட் அணி:
அவர்களைத் தொடர்ந்து 3வது இடத்தில் நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 2023 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 695 ரன்கள் குவித்து சிறப்பாக செயல்பட்டதால் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். அடுத்ததாக இங்கிலாந்து நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் கடந்த ஆஷஸ் தொடரை சமன் செய்தது போன்ற முக்கிய வெற்றிகளில் பங்காற்றி அசத்தியதால் 5வது பேட்ஸ்மேனாக தேர்வாகியுள்ளார்.

அதற்கடுத்ததாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு 163 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த டிராவிஸ் ஹெட் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் மட்டும் அவர் 919 ரன்கள் குவித்ததால் இந்த கௌரவம் மிகுந்த அணியில் இடம் பிடித்துள்ளார். அதன் பின் முதன்மை ஆல் ரவுண்டராக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து இந்த அணியின் விக்கெட் கீப்பராக கடந்த வருடம் 44 கேட்ச், 10 ஸ்டம்பிங் உட்பட மொத்தம் 54 விக்கெட்களை வீழ்த்த உதவி பேட்டிங்கிலும் கணிசமாக பங்காற்றிய ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார். இந்த அணியின் கேப்டனாக சந்தேகமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆஷஸ் ஆகிய 2 தொடர்களையும் ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்த பட் கமின்ஸ் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:

இறுதியாக 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய நம்பர் ஒன் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2023இல் 38 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க், 22 விக்கெட்களை எடுத்து சொந்த மண்ணில் ஓய்வு பெற்ற இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் பந்து வீச்சு துறையில் தேர்வாகியுள்ளனர். அந்த அணி பின்வருமாறு. உஸ்மான் கவாஜா, திமுத் கருணரத்னே, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட், ரவீந்திர ஜடேஜா அலெக்ஸ் கேரி, (கீப்பர்) பட் கம்மின்ஸ் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா மிட்சேல் ஸ்டார்க், ஸ்டூவர்ட் பிராட்

Advertisement