எங்களோட தரமான ஸ்பின்னரை கண்டுப் பிடிச்சுட்டோம்.. அவர் தான் புதிய அஸ்வின்.. புகழ்ந்த மைக்கேல் வாகன்

Micheal Vaughan 8
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரரை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்துள்ளது. இத்தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாத அந்த அணி அதிரடியாகவே விளையாட முயற்சித்து ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்தது.

அதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து தலை குனிந்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்தியாவை வீழ்த்துவதற்காக டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர் ஆகிய 2 புதுமுக ஸ்பின்னர்களை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது.

- Advertisement -

அடுத்த அஸ்வின்:
அதில் ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்த டாம் ஹார்ட்லி உண்மையாகவே அபாரமாக செயல்பட்டு இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார். அதே போல வெறும் 20 வயதாகும் சோயப் பஷீர் இத்தொடரில் ரோஹித் சர்மா போன்ற இந்திய வீரர்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக ராஞ்சியில் நடந்த நான்காவது போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சோயப் பஷீர் எனும் திறமையான ஸ்பின்னரை இந்த உலகிற்கு இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். மேலும் சோயப் பஷீர் தான் புதிய ரவிச்சந்திரன் அஸ்வின் என்று அதிரடியான கருத்தை தெரிவிக்கும் மைக்கேல் வாகன் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது வருமாறு. “இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு இது நல்ல வாரமாக அமைந்தது”

- Advertisement -

“இந்த சிறப்பான வாரத்தில் மற்றும் ஒரு உலகத்தரம் வாய்ந்த சூப்பர் ஸ்டார் வீரரான சோயப் பஷீரை கண்டறிந்ததை நாங்கள் கொண்டாடுகிறோம். தன்னுடைய 2வது போட்டியிலேயே 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் தான் புதிய அஸ்வின். அவரை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். எனவே இங்கிலாந்து கிரிக்கெட்டில் நாங்கள் புதிய சூப்பர் ஸ்டார் வீரர் ஒருவரை கண்டறிந்ததை கொண்டாடுகிறோம். தரம்சாலாவில் நடைபெறும் ஐந்தாவது போட்டியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி இங்கிலாந்து வெல்லும் என்று நான் எதிர்பார்க்கிறேன்”

இதையும் படிங்க: லக்னோ அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து க்ருனால் பாண்டியா நீக்கம் – புதிய துணைக்கேப்டன் யார்?

“அவர்கள் கடந்த ஆஷஸ் தொடரை விட தற்போது சிறந்த அணியாக முன்னேறியுள்ளனர். செசன் அடிப்படையில் நீங்கள் பார்க்கும் போது இங்கிலாந்து சிறந்த அணியாகவே தென்பட்டனர். நான் அவர்கள் சிறந்த அணியாக தெரிகின்றனர் என்று சொல்கிறேன். ஆனால் தொடரை வெல்லும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசிப் போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement