லக்னோ அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து க்ருனால் பாண்டியா நீக்கம் – புதிய துணைக்கேப்டன் யார்?

Krunal-Pandya
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17-ஆவது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இதுவரை 16 சீசன்களை நிறைவு செய்துள்ள ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 17-ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று வரும் ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான ஆயத்த பணிகளில் தற்போது அனைத்து ஐபிஎல் அணிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 10 ஐபிஎல் அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது தங்களது அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் லக்னோ அணியின் துணை கேப்டனாக க்ருனால் பாண்டியா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைக்கேப்டனாக நிக்கோலஸ் பூரான் செயல்படுவார் என்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் போது காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுல் இரண்டாம் கட்ட போட்டிகளில் இருந்து வெளியேறிய வேளையில் க்ருனால் பாண்டியா அந்த அணியை வழிநடத்தி இருந்தார்.

இதையும் படிங்க : என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத தருணம் இதுதான்.. ஷிவம் துபே நெகிழ்ச்சி கருத்து – விவரம் இதோ

குறிப்பாக 6 போட்டிகளில் அவர் அந்த அணியின் கேப்டனாக பணியாற்றி இருந்த வேளையில் இந்த ஆண்டு தொடர் துவங்கும் முன்னரே அவர் துணைக்கேப்டன் பதிவியிலிருந்து வெளியேற்றப்பட்டு பூரான் துணைக்கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement