என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத தருணம் இதுதான்.. ஷிவம் துபே நெகிழ்ச்சி கருத்து – விவரம் இதோ

Dube
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 17-வது சீசனானது வரும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரில் வெற்றியுடன் தோனியை வழி அனுப்ப சென்னை அணியின் வீரர்கள் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ரஞ்சி தொடரில் விளையாடிய போது ஷிவம் துபே காயமடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஷிவம் துபே தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் குறித்து தனியார் விழாவில் பங்கேற்றபோது வெளிப்படையாகவே மனம் திறந்து பேசி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : வாழ்க்கையில் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றால் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதுதான். இளைஞர்களே வெற்றியோ, தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கி செல்லும் படியாக கருத வேண்டும் என்று ஷிவம் துபே கூறியுள்ளார்.

- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான அவர் இதுவரை 51 போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்களுடன் 1106 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. என்னதான் இவர் ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளுக்காக விளையாடி இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சென்னை அணிக்காக 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற அணிகளில் இவர் விளையாடிய போது பெரியளவில் கண்டுகொள்ளப்பட வில்லை.

இதையும் படிங்க : தோனி, கோலி, ரோஹித்தை ஓரங்கட்டிய ஜெய் ஷா.. முக்கிய பட்டியலில் டாப் இடத்தை பிடித்து மிரட்டல்

ஆனால் தோனியின் தலைமையில் இவர் விளையாடிய போதே ரசிகர்கள் மத்தியில் கவனத்தில் ஈர்த்திருந்தார். அதோடு இந்திய அணிக்காகவும் கடந்து 2019-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தாலும் தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய பிறகு அவஏ மீண்டும் கடந்த ஆண்டு கம்பேக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement