தோனி, கோலி, ரோஹித்தை ஓரங்கட்டிய ஜெய் ஷா.. முக்கிய பட்டியலில் டாப் இடத்தை பிடித்து மிரட்டல்

Jay Shah 6
- Advertisement -

இந்தியாவுக்காக 80களில் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அவர்களைத் தொடர்ந்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, போன்றவர்கள் நம்பிக்கை நாயகர்களாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததுடன் இந்திய கிரிக்கெட்டை மிகவும் பிரபலமானவர்களாகவும் மக்களிடையே கொண்டு சென்றனர்.

அதை தொடர்ந்து நவீன கிரிக்கெட்டில் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக சாதனை படைத்த எம்எஸ் தோனி காலத்தால் அழிக்க முடியாத வீரராக ஓய்வு பெற்றார். தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களுடைய மிகச் சிறந்த பேட்டிங் திறமையால் இந்தியாவின் பல வெற்றிகளின் முக்கிய பங்காற்றி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கின்றனர்.

- Advertisement -

டாப்பில் ஜெய் ஷா:
இந்நிலையில் 2024ஆம் ஆண்டின் அதிக சக்தி வாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் கிரிக்கெட்டில் அதிக சக்தி வாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் ரசிகர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத வகையில் எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களை அசால்டாக முந்தியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா 35வது இடத்தை பிடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து தான் விராட் கோலி 38, தோனி 58 ரோகித் சர்மா 68 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர். இதற்கான காரணத்தைப் பற்றி அந்த இணையத்தில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “ஏற்கனவே ஆசிய கவுன்சிலின் இளம் தலைவராக இருக்கும் அவர் அடுத்த ஐசிசி சேர்மன் பதவிக்கு வரும் வழியில் இருக்கிறார். ஐசிசியிடம் இருந்து பிசிசிஐக்கு கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாக மாறுவதில் ஜெய் ஷா முக்கிய பங்காற்றி வருகிறார்”

- Advertisement -

“அவரால் 22.8 சதவிகிதமாக இருந்த வருமானம் தற்போது ஐசிசியிடம் இருந்து 38.5 சதவிதமாக பிசிசிஐக்கு கிடைக்கிறது. இதனால் ஆண்டுக்கு பிசிசிஐக்கு 231 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கிறது. மேலும் கடந்த வருடம் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் செல்ல முடியாது என்ற நிலைபாட்டைக் கொண்டிருந்த ஜெய் ஷா இந்தியா பொதுவான இடத்தில் விளையாடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்”

இதையும் படிங்க: முதலில் விராட் கோலி, ரோஹித்தையும் ரஞ்சிக் கோப்பையில் ஆடச்சொல்லுங்க.. 1983 உ.கோ வென்ற முன்னாள் வீரர்

“ஒரு காலத்தில் பிசிசிஐ அதிகாரம் மற்றும் பொருளாதாரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த கதையை ஜெய் ஷா மாற்றியுள்ளார். அவர் இந்திய அணியின் கேப்டன் அல்லது முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர் கிடையாது. ஆனால் அவர் விராட் கோலியை விட இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பெயரை கொண்டவர்” என்று தாறுமாறாக புகழ்ந்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement