போட்டியே இனிமேல் தான்.. 4வது நாளில் அதை செஞ்சு இந்தியாவை தோற்கடிப்போம்.. சோயப் பஷீர் சவால்

Shoaib Bashir
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனவே இத்தொடரை வெல்ல பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கிய 4வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 353 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் 122* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கடுமையாக போராடியும் 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 73, துருவ் ஜுரேல் 90 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியாவுக்கு சவால்:
அப்போது 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து வெற்றி வாய்ப்பை கையில் வைத்திருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத அந்த அணி 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

இறுதியில் 192 ரன்களை சேசிங் செய்யும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 40/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோகித் சர்மா 24*, ஜெய்ஸ்வால் 16* ரன்களுடன் உள்ளனர். எனவே நான்காவது நாளில் கைவசம் 10 விக்கெட்டுகளை வைத்துள்ள இந்தியா இன்னும் தேவைப்படும் 152 ரன்களையும் எடுத்து உறுதியாக வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் 4வது நாளில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து தங்களால் வெல்ல முடியும் என்று இங்கிலாந்து வீரர் சோயப் பஷீர் உறுதியான சவாலை தெரிவித்துள்ளார். குறிப்பாக சுழலுக்கு சாதகமாக மாறியுள்ள ராஞ்சி பிட்ச்சில் அஸ்வின், ஜடேஜாவை பார்த்து உத்வேகமடைந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “10 விக்கெட்டுகள் எடுப்பதற்கு 10 வாய்ப்புகள் போதும். அதற்காக எங்களுடைய வீரர்கள் ஆர்வமாக உள்ளனர்”

இதையும் படிங்க: அதையும் செய்ய வாழ்த்துகிறேன்.. தனது வாழ்நாள் சாதனையை சமன் செய்த அஷ்வினை பாராட்டிய கும்ப்ளே

“தற்போது எங்களுடைய மூட் நன்றாக உள்ளது. எனக்கும் டாம் ஹார்ட்லிக்கும் முக்கிய வேலை இருக்கிறது என்பதை அறிவோம். நாங்கள் அந்த சவாலுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். இது போன்ற பிட்ச்களில் அஸ்வின் மற்றும் ஜடேஜா செயல்பட்டதை நாங்கள் பார்த்தோம். அதிலிருந்து நாங்கள் பெரிய தன்னம்பிக்கையை எடுத்துள்ளோம். தற்போது பிட்ச் மோசமடைந்துள்ளது. எனவே நல்ல லைன் மற்றும் லென்த்தை நாங்கள் பார்த்தோம். அதுவே எங்களுடைய வெற்றிக்கான அறிகுறியாகும்” என்று கூறினார்.

Advertisement