பேசாம குட் பை சொல்லிட்டு கிளம்புங்க.. ரோஹித், விராட் தேர்வில் பாண்டியாவுக்கு சோயப் அக்தர் அட்வைஸ்

Shoaib Akhtar 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் பொறுப்புடன் ஆரம்ப முதலே அபாரமாக விளையாடி தலா 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை சந்தித்த காரணத்தால் களத்திலேயே கண்ணீர் விட்டு கலங்கினார்கள்.

மேலும் இன்னும் 4 வருடங்கள் கழித்து விராட் கோலி 39 ரோகித் சர்மா 40 வயதை தொட்டு விடுவார்கள் என்பதால் 2027 உலக கோப்பையில் அவர்கள் விளையாடுவார்களா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 2022 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் தோல்வியை சந்திப்பதற்கு பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

சோயப் அக்தர் அட்வைஸ்:
அதனால் சீனியர்களை கழற்றி விட்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவமிகுந்த ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் புதிய அணியை களமிறக்கும் முடிவை பிசிசிஐ கடந்த வருடம் எடுத்தது. ஆனால் தற்போது விராட் மற்றும் ரோகித் ஆகிய இருவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பதால் அதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சச்சினை கேப்டன் தோனி மதித்தது போல் தற்போது சீனியர்களாக இருக்கும் விராட் மற்றும் ரோகித்தை ஹர்திக் பாண்டியா மதித்து சுதந்திரமாக விளையாடுவதற்கு வழி விட வேண்டும் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரோகித் கேப்டன்ஷிப் செய்ய விரும்பினால் அதற்கு குட் பை சொல்லி பாண்டியா வழி விட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் இன்னும் திறமை இருக்கிறதா? என்று நீங்கள் கேட்டால் ஆம் இருக்கிறது என சொல்வேன். இந்த உலகில் ரோகித் சர்மாவை விட சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் தற்போது இருக்கிறாரா? என்று நீங்கள் கேட்டால் இல்லை என சொல்வேன். தோனி வந்த போது சச்சினை மதித்தார். அதே போல விராட் கோலி வந்த போது தோனியை மதித்தார். தற்போது ரோஹித் கேப்டனாக வந்த பின் விராட் கோலியை மதிக்கிறார்”

இதையும் படிங்க: குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட இருக்கும் ஹார்டிக் பாண்டியா – இந்த சண்டை தான் காரணமாம்

“எனவே அந்த 2 மகத்தான வீரர்களுக்கு ஹர்திக் பாண்டியா மதிப்பு கொடுத்து வழி அனுப்பும் நேரம் இதுவாகும். அவர்கள் மரியாதைக்கு தகுதியானவர்கள். இப்படி நான் சொல்வது அழுத்தத்தை கொடுத்தாலும் விராட் மற்றும் ரோகித்துக்கு தம்முடைய கைகளை கீழே இறக்கி பாண்டியா குட் பாய் சொல்ல வேண்டும். அவர்களால் தான் பாண்டியா தற்போது இந்திய அணியில் இருக்கிறார். எனவே இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான அந்த இருவரும் விடைபெறும் முன் மதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement