குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட இருக்கும் ஹார்டிக் பாண்டியா – இந்த சண்டை தான் காரணமாம்

Pandya
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்து மற்ற அனைத்து வீரர்களும் வெளியேற்றப்படும்போது மும்பை அணியில் இருந்து ஹார்டிக் பாண்டியா வெளியேற்றப்பட்டார். அந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஹார்டிக் பாண்டியாவை தங்களது அணியின் கேப்டனாக அறிவித்து 15 கோடி ரூபாய் சம்பளத்தையும் கொடுத்திருந்தது.

அப்படி 2022-ஆம் ஆண்டு சீசனில் முதல் முறையாக குஜராத் அணியை வழிநடத்திய ஹார்டிக் பாண்டியா அறிமுக தொடரிலேயே குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று பரிசளித்தார். அதன்பிறகு இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டி வரை குஜராத் அணியை கொண்டு வந்து கடைசி நேரத்தில் வெற்றியை தவற விட்டிருந்தார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கேப்டன்சி பொறுப்பேற்ற இரண்டு சீசன்களிலேயே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாகவும் தற்போது உயர்ந்திருக்கிறார்.

கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணியிலிருந்த அவர் தற்போது டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும் நிலையில் தான் உள்ளது என்றே தற்போதும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஹார்டிக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து வெளியேற விருப்பப்படுவதாகவும், மீண்டும் மும்பை அணியில் விளையாட சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் யாதெனில் : குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகத்துடனும் அந்த அணியின் உரிமையாளருடன் பாண்டியாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே ஹார்டிக் பாண்டியா இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அந்த டீம் தான் ஸ்பெஷல்.. மும்பை, சென்னை அணிகளில் தமக்கு பிடித்தது பற்றி பேசிய அம்பத்தி ராயுடு

மேலும் தற்போது 36 வயதை எட்டியிருக்கும் ரோகித் சர்மா இன்னும் ஒரு சில சீசன்களே விளையாடுவார் என்பதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருப்பார் என்பதாலும் இந்த டிரேடிங் உறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது எப்படி இருப்பினும் நவம்பர் 26-ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement