என்னங்க பெரிய கோலி! எனக்கு எதிராக விளையாடிருந்தா இவ்ளோ சதம் அடிச்சுருக்க முடியாது – முன்னாள் பாக் வீரர்

mrf virat
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் மற்றும் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது அதிரடி நிறைந்த அசுர வேக பந்துகளால் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட் போன்ற உலகின் எத்தனையோ பேட்ஸ்மேன்களை தனது அதிவேகமான பந்துகளால் திணறடித்தவர். உலக கிரிக்கெட் வரலாற்றில் கிளன் மெக்ராத், பிரெட் லீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவராக கருதப்படுகிறார். அதிலும் கடந்த 2003 உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கிலோமீட்டர் வேக பந்தை வீசிய அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய பவுலர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

akhtar

- Advertisement -

அதிலும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சோயப் அக்தர் ஆகியோர் நேருக்கு நேர் மோதிய போட்டிகள் எல்லாம் காலத்துக்கும் மறக்க முடியாது. ஏனெனில் சச்சினை அவுட் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் வேண்டுமென்றே அதிவேகமான பவுன்சர் பந்துகளை சோயப் அக்தர் வீச முயல்வார். அதற்கு சச்சின் டெண்டுல்கர் நிறைய முறை தனது அபார திறமையால் சிக்ஸர் பறக்க விட்டு பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும் ஒரு சில தருணங்களில் அவுட்டும் ஆகியுள்ளார். அந்த அளவுக்கு தனித்துவமான திறமை வாய்ந்த அவர் இன்று நிறைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக போற்றப்படுகிறார்.

இதனால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் வீசிய வேகத்திற்கு ஈடாக நிகழ்காலத்தில் இருக்கும் பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற பவுலர்களால் வீச முடிவதில்லை. அதன் காரணமாகவே தற்போதைய கிரிக்கெட்டில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மென்கள் என கருதப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களுக்கு அவரைப் போன்ற ஒரு அசுர வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

shoaib akhtar sachin tendulkar

இந்நிலையில் தனது காலத்தில் விராட் கோலி விளையாடிக் இருந்தால் இந்த அளவுக்கு ரன்களையும் சதங்களையும் அடித்திருக்க மாட்டார் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஒரு நல்ல மனிதர். மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால் எனது காலத்தில் அவருக்கு எதிராக நான் பந்துவீசி இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவரால் இந்த அளவுக்கு ரன்களை எடுத்திருக்க முடியாது.

- Advertisement -

இருப்பினும் எது எப்படி இருந்தாலும் இதுநாள் வரை அவர் செய்துள்ள சாதனைகள் அபாரமானது. அவர் எடுத்துள்ள ரன்களுக்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளார். எனது காலத்தில் அவர் விளையாடி இருந்தால் 50 சதங்களை அடித்திருக்க முடியாது. 20 – 25 சதங்களை மட்டுமே அடித்திருக்க முடியும் என்றாலும் அது அனைத்தும் தரமானதாக இருந்திருக்கும். அதே சமயம் அவரின் உள்ளே இருந்த மிகச்சிறந்த திறமையை என்னால் வெளிக்கொண்டு வந்திருக்க முடியும்” என கூறினார்.

Akhtar

இதுநாள் வரை மொத்தம் 70 சதங்களை அடித்துள்ள விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பேட்மேன்களுக்கான பட்டியலில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பின் 3-வது இடத்தில் ஜொலிக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்களை அடித்த வீரர் உள்ளிட்ட நிறைய சாதனைகளை படைத்து வருகிறார். ஆனால் தமக்கு எதிராக அவர் விளையாடி இருந்தால் இவ்வளவு ரன்களையும் சதங்களையும் அடித்திருக்க முடியாது எனக்கூறும் சோயப் அக்தர் 20 – 25 சதங்களை மட்டுமே அடித்திருக்க முடியும் என்றாலும் அவை அனைத்தும் தரமானதாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அவர் கூறுவதுபோல சோயப் அக்தரை எதிர்கொள்ள யாராக இருந்தாலும் யோசிப்பார்கள் என்று கடந்த 2017-ஆம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியின்போது விராட் கோலி ஒப்புக் கொண்டிருந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஆசிய கோப்பையின் போது அவரை எதிர் கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற அவர் அதற்கு முன்பாகவே அவுட்டானதால் அந்த வாய்ப்பை இழந்தார். அது பற்றி அந்த தொடர் முடிந்த பின் அவர் பேசியிருந்தது பின்வருமாறு. “நான் சோயப் அக்தரை எதிர்கொண்டது இல்லை என்றாலும் தம்புலாவில் நடந்த ஒரு போட்டியில் அவரின் பந்துவீச்சை பார்த்துள்ளேன்.

இதையும் படிங்க : நான் பாத்ததுலேயே பெஸ்ட் யங் பிளேயர்னா அது இவர்தான் – இளம்வீரரை பாராட்டிய மைக்கல் வாகன்

அந்தப் போட்டியில் முன்கூட்டியே நான் அவுட்டானதால் அவரை எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால் தனது கேரியரின் கடைசிகட்ட தருணங்களில் இருந்த அவர் அந்த போட்டியில் அச்சுறுத்தலாக பந்து வீசினார். அதன் காரணமாக அவர் உச்சபட்ச செயல்பாடுகளை வெளிப்படுத்தும்போது எந்த ஒரு பேட்ஸ்மெனும் அவரை எதிர் கொள்ளக் கூடாது என்று அந்த சமயத்தில் நான் நினைத்தேன்” என்று கூறியிருந்தார்.

Advertisement