நான் பாத்ததுலேயே பெஸ்ட் யங் பிளேயர்னா அது இவர்தான் – இளம்வீரரை பாராட்டிய மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத வேளையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆண்டு பிசிசிஐயின் தீவிர முயற்சி காரணமாக தற்போது பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சிறப்பாகத் திட்டமிடப்பட்டு அருமையாக நடைபெற்று வருகிறது. அதன்படி மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது தற்போது ஆரம்பகட்ட லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் இதுவரை எந்தவித பிரச்சினையும் இன்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளதால் போட்டிக்கு போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 அணிகள் இணைந்துள்ளதால் கூடுதலாக பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

அதன்படி வாய்ப்பினைப் பெற்ற பல இளம் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகிற்கு தங்களது திறனை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய டேவால்ட் பிரீவிஸ் என்கிற இளம் வீரர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதன் காரணமாக மெகா ஏலத்தின்போதே அவரின் மீது அனைத்து அணிகளும் ஆர்வத்தை காண்பிக்க இறுதியாக மும்பை அணிக்காக அவர் விளையாட ஒப்பந்தம் ஆனார். அப்படி ஒப்பந்தம் ஆனதிலிருந்து அவருக்கு கிடைத்து வரும் வாய்ப்புகளில் எல்லாம் மும்பை அணிக்காக அவர் மூன்றாவது இடத்தில் இறங்கி தனது அற்புதமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

மிகவும் அதிரடியாக விளையாடும் இவருக்கு என்ற ரசிகர்களின் மத்தியில் பேபி ஏ.பி.டி என்கிற பெயரும் உண்டு. அந்த வகையில் நடைபெற்று முடிந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கூட 13 பந்துகளை சந்தித்து அவர் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 31 ரன்கள் குவித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

இந்நிலையில் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பார்த்து வியந்துபோன இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரிவிசை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இளம் வீரர் என்று குறிப்பிட்டு அந்த டிவீட்டை வெளியிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement