2 வருசத்துக்கு சேத்து மொத்தமாக செஞ்சுட்டாரு.. பாகிஸ்தானை நொறுக்கி அவமானப் படுத்தீட்டாங்க.. அக்தர் சோக பேட்டி

Shoaib Akhtar 5
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தை தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக பாபர் அசாம் 5 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், பாண்டியா, பும்ரா, குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்து பாதி வெற்றியை உறுதி செய்தனர். இந்தியாவின் மீதி வெற்றியை 192 ரன்கள் துரத்தும் போது கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 86, ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்கள் எடுத்து 30.3 ஓவரிலேயே எளிதாக சுவைப்பதற்கு உதவினார்கள்.

- Advertisement -

அதனால் ஷாஹீன் அப்ரிடி அதிகபட்சமாக 2 விக்கெட்கள் எடுத்தும் பாகிஸ்தானால் வெற்றி காண முடியவில்லை. மேலும் இந்த வெற்றியால் உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்றுடித்து இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தையும் கௌரவத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் நிச்சயமாக வரலாற்றை மாற்றுவோம் என்று வகைவகையாக முன்னாள் சோயப் அக்தர் விமர்சித்திருந்தது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அடிக்காததற்கும் சேர்த்து இப்போட்டியில் ரோகித் சர்மா அடித்து நொறுக்கி பாகிஸ்தானுக்கு அவமான தோல்வியை பரிசளித்ததாக சோயப் அக்தர் சோகமாக கூறியுள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் உள்ளது பின்வருமாறு. “ரோஹித் சர்மா விளையாடிய இன்னிங்ஸ் பாகிஸ்தான் பவுலிங் அட்டாக்கை அவமானப்படுத்தியது. குறிப்பாக கடந்த 2 வருடங்களாக அதிக ரன்கள் எடுக்காததற்கு சேர்த்து இப்போட்டியில் அவர் பழி வாங்கினார்”

- Advertisement -

“இருப்பினும் ரோஹித் சர்மா இப்படி மீண்டும் விளையாடுவதை பார்ப்பது நன்றாக இருந்தது. பாகிஸ்தான் பவுலர்களை சரமாரியாக அடித்த நொறுக்கினார். ஆனால் ரோகித் எங்கள் பவுலர்களை நொறுக்கிய போது இந்தியா ஃபினிஷிங் செய்ய கடைசி வரை போட்டியை ஏன் எடுத்து செல்ல வேண்டும். பாகிஸ்தானை பொறுத்த வரை இது மோசமான ஏமாற்றமான செயல்பாடாகும். ஏனெனில் இந்தியா முழுவதுமாக பாகிஸ்தானை அடித்து நொறுக்கியது”

இதையும் படிங்க: 2011-ல நடந்த சம்பவம் அப்படியே இப்போ 2023-ல் நடந்திருக்கு. அப்போ கப் நமக்கு தான் – சுவாரசிய தகவல்

“அதிலும் ரோகித் சர்மா ஒன் மேன் ஆர்மி போல் விளையாடினார். பெரிய பிளேயரான அவரிடம் நிறைய ஷாட்டுகள் இருக்கிறது. அப்படி முழுமையான வீரராக இருக்கும் அவர் விளையாடும் இந்தியா முழுமையான அணியாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணியில் 4 பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் மிடில் ஆர்டர் சரியாக இல்லை. ஸ்பின்னர்கள் இல்லை. எதுவுமே சரியாக இல்லை” என்று கூறினார்.

Advertisement