2011-ல நடந்த சம்பவம் அப்படியே இப்போ 2023-ல் நடந்திருக்கு. அப்போ கப் நமக்கு தான் – சுவாரசிய தகவல்

IND-vs-PAK
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை வென்றிருந்தது. அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் இந்திய அணி கோப்பையை தவற விட்டிருந்த வேளையில் தற்போது மீண்டும் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை உள்ள அதிக வாய்ப்பு உள்ளது என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் இந்திய அணியும் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேளையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கும், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கும் ஒரு ஒற்றுமை உள்ளதாகவும் அதன் காரணமாக இந்திய அணியே இம்முறை உலகக் கோப்பை தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் ஒப்பிடப்பட்டு சில கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் இந்திய அணி கடந்த 2011-ஆம் ஆண்டு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் போது பாகிஸ்தான் அணியானது இந்திய அணியிடம் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது.

- Advertisement -

அந்த போட்டியின் போது இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, முனாப் பட்டேல், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் என அந்த போட்டியில் பந்துவீசி 5 பவுலர்களும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அந்த போட்டியானது 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்றிருந்தது.

இதையும் படிங்க : சிக்ஸர் அடிப்பதன் ரகசியம் என்னன்னு அம்பயர் கேட்டாரு.. பாண்டியாவிடம் பின்னணியை பகிர்ந்த ரோஹித்

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான 12-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா, முகமது சிராஜ், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 5 பவுலர்களுமே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்படி இரண்டு முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்ற போதும் 5 பவுலர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒற்றுமை இம்முறை அரங்கேறியுள்ளதால் நிச்சயம் இம்முறை உலகக்கோப்பை நமக்குத் தான் என்ற ஒரு கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement