சிக்ஸர் அடிப்பதன் ரகசியம் என்னன்னு அம்பயர் கேட்டாரு.. பாண்டியாவிடம் பின்னணியை பகிர்ந்த ரோஹித்

Rohit Sharma Umpire
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களின் 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீட்டுக்கட்டு போல சரிந்து 191 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், ஜடேஜா, பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 191 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86 (63) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

- Advertisement -

விசாரித்த அம்பயர்:
அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்கள் எடுத்ததால் 173 பந்துகள் மீதம் வைத்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பையில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து தங்களுடைய வெற்றிக் கொடியை மீண்டும் பறக்கவிட்டுள்ளது. அதனால் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்களை எடுத்தும் பாகிஸ்தான் தோல்வியை நிறுத்த முடியவில்லை. முன்னதாக கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை பந்தாடி உலக சாதனைகளை படைத்த ரோகித் சர்மா இப்போட்டியில் பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி தம்முடைய தரத்தை காட்டினார்.

குறிப்பாக 140க்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஹாரிஸ் ரவூப் வீசிய ஒரே ஓவரில் கவர்ஸ் திசையிலும் நேராகவும் 2 சிக்சர்களை அடித்த அவர் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். பொதுவாக ரோகித் சர்மா என்றாலே பொல்லார்ட், ரசல் போல காட்டுத்தனமாக அடிக்காமல் சிறப்பான பேட்டிங் டெக்னிக்கை பின்பற்றி அற்புதமான டைமிங் கொடுத்து சிக்ஸர்களை பறக்க விடுவதில் வல்லவராக திகழ்கிறார்.

- Advertisement -

அந்த ஸ்டைலை பின்பற்றி ஏற்கனவே சர்வதேச அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த அவர் கடந்த போட்டியில் தான் புதிய உலக சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் இப்போட்டியின் போது ஒரு சிக்ஸர் அடித்த பின் ரோகித் சர்மாவிடம் “எப்படி இது போன்ற சிக்ஸர்களை நீங்கள் அடிக்கிறீர்கள்” என்று களத்தில் இருந்த நட்சத்திர அம்பயர் மரைஸ் எராஸ்மஸ் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: அவர் ஒன்னும் வாசிம் அக்ரம் ரேஞ்ச்’லாம் கிடையாது.. பாக் பவுலரை ஓப்பனாக விமர்சித்த.. ரவி சாஸ்திரி

அதற்கு ரோஹித் சர்மா தனது கையின் பலத்தை காண்பிப்பது போல் ஏதோ சொன்னார். இறுதியாக அம்பயரிடம் என்ன சொன்னீர்கள் என்று ரோகித்திடம் பாண்டியா போட்டியின் முடிவில் கேட்டார். அதற்கு “அம்பயர் எப்படி நீங்கள் இது போன்ற சிக்ஸர்கள் அடிக்கிறீர்கள். பேட்டில் எதுவும் வைத்திருக்கீர்களா என்று என்னிடம் கேட்டார். அதற்கு பேட்டில் எதுவுமில்லை. இவை அனைத்தும் என்னுடைய பவர்” என்று பாண்டியாவிடம் ரோகித் சர்மா சொன்னது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement