அவர் ஒன்னும் வாசிம் அக்ரம் ரேஞ்ச்’லாம் கிடையாது.. பாக் பவுலரை ஓப்பனாக விமர்சித்த.. ரவி சாஸ்திரி

Ravi Shastri 2
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் செய்த பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த பெரும்பாலான வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்மான் 49 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, குல்தீப், ஜடேஜா, பாண்டியா சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 86, ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

வாசிம் அக்ரம் இல்ல:
அதன் காரணமாக 1992 இதுவரை உலகக்கோப்பை சந்தித்த 8வது போட்டியில் பாகிஸ்தானை தொடர்ச்சியாக தோற்கடித்த இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. முன்னதாக இந்த போட்டியில் 2017, 2021 ஐசிசி தொடர்களைப் போல உலகக் கோப்பையில் தோற்று வரும் வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று கேப்டன் பாபர் அசாம் தெரிவித்திருந்தார்.

அவரை விட மிகவும் ஆசையுடன் சாதாரண செல்ஃபி கேட்ட இந்திய ரசிகர்களிடம் 5 விக்கெட்டுகளை எடுத்து உங்களை தோற்கடித்த பின் எடுத்துக் கொள்ளலாம் என்று சாகின் அப்ரிடி தெரிவித்திருந்தார். ஆனால் இப்போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் 6 ஓவரில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த அவரால் பாகிஸ்தானை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

- Advertisement -

குறிப்பாக பும்ராவை விட உலகின் சிறந்த பவுலர் என்றும் ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவதில் வாசிம் அக்ரமுக்கு நிகரானவர் என்றும் ஷாஹீன் அப்ரிடியை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொண்டாடுவது வழக்கமாகும். அப்படியிருந்தும் அவரால் இப்போட்டியில் பாகிஸ்தானின் அவமான தோல்வியை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடி புதிய பந்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரே தவிர வாசிம் அக்ரமுக்கு நிகரானவர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தும் முன்னர் நான் செய்தது இதுதான். மந்திரம் எல்லாம் எதுவும் போடல – பாண்டியா விளக்கம்

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு. “நாசீம் ஷா காயத்தால் விளையாடாத நிலையில் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சின் தரம் சுமாராகும். மேலும் ஷாஹீன் அப்ரிடி ஒன்றும் வாசிம் அக்ரம் கிடையாது. புதிய பந்தில் சில விக்கெட்டுகளை இருப்பதை தவிர்த்து அவரிடம் ஸ்பெஷல் எதுவும் கிடையாது. அவர் சாதாரண பவுலர் தான். எனவே அவரை எதிர்கொள்வது பெரிய விஷயம் கிடையாது என்ற உண்மையை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement