இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தும் முன்னர் நான் செய்தது இதுதான். மந்திரம் எல்லாம் எதுவும் போடல – பாண்டியா விளக்கம்

Pandya
- Advertisement -

அக்டோபர் 14-ஆம் தேதி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணியானது பாகிஸ்தான அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு உலகக் கோப்பை வரலாற்றில் எட்டாவது முறையாக தொடர்ச்சியாக பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்த போட்டியின் போது மைதானத்தில் நடைபெற்ற பல சுவாரசியமான விடயங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்த வேளையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டான ஹார்திக் பாண்டியா வீசிய ஒரு பந்தும் தற்போது பெரிய அளவில் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 41 ரன்கள் எடுத்திருந்த வேளையில் தங்களது முதல் விக்கெட்டை இழந்து இருந்தது. அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் இமாம் உல் ஹக்கும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அற்புதமாக விளையாடி வந்தனர். அந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் சற்று சிரமப்பட்டனர்.

அவ்வேளையில் போட்டியின் 13-வது ஓவரை வீசிய ஹார்டிக் பாண்டியாவின் 2 ஆவது பந்தில் இமாம் உல் ஹக் பாயிண்ட் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார். அதனை கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத ஹார்டிக் பாண்டியா அதிருப்தியுடன் தன்னை தானே திட்டிக்கொண்டவாறு அடுத்த பந்தினை வீச சென்று விட்டார்.

- Advertisement -

அப்போது அந்த ஓவரின் மூன்றாவது பந்தினை வீசும் முன்னதாக கையை குவித்து வேண்டிக் கொள்வது போன்று ஏதோ செய்துவிட்டு அடுத்த பந்தினை பாண்டியா வீசினார். ஆனால் அந்த பந்தை அடிக்க முயன்று எட்ஜ்ஜாகி இமாம் உல் ஹக் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இப்படி பாண்டியா வேண்டிக்கொண்டு வீசிய அடுத்த பந்தியிலேயே இமாம் உல் ஆட்டமிழந்தது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்துள்ள ஹார்டிக் பாண்டியா கூறியதாவது :

இதையும் படிங்க : உலககோப்பை தொடரில் இருந்து திடீரென வெளியேறிய தசுன் ஷனகா. என்ன காரணம்? – புதிய கேப்டன் இவர்தான்

நான் இமாம் உல் ஹக் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஏதோ வேண்டிக் கொள்ளவில்லை. கடந்த பந்தில் செய்த தவறை திருப்பி செய்யக்கூடாது என்று என்னை நானே மோட்டிவேட் செய்து கொண்டேன். மேலும் சரியான இடத்தில் பந்தை வீச வேண்டும் என்றும் கூடுதலாக எதையும் முயற்சிக்கக் கூடாது என்று எனக்குள் நானே கூறிக்கொண்டு தான் பந்து வீசினேன். அதில் வேறு எந்த ரகசியமும் கிடையாது என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement