இது இந்திய ரசிகர்கள், சென்னை மைதானத்துக்கு எதிரான பாகிஸ்தானின் யுத்தம்.. அக்தர் அதிரடி பேட்டி

Shoaib Akhtar 8
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்த அந்த அணி அதன் பின் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்விகளை சந்தித்தது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக 191 ரன்களுக்கு சீட்டுக்கட்டு போல சரிந்த பாகிஸ்தான் உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக தோல்வியை சந்தித்தது. அதனால் செமி ஃபைனலுக்கு செல்ல வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தான் அக்டோபர் 23ஆம் தேதி தமிழகத்தின் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

- Advertisement -

அதிரடி கருத்து:
அதில் ரசித் கான், முஜீப், முகமது நபி போன்ற உலகத்தரமான ஸ்பின்னர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியல்ல பாகிஸ்தானுக்கு எதிராக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்திருக்கக்கூடிய சென்னை மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் அங்கிருக்கும் இந்திய ரசிகர்களுக்கு எதிரான போட்டி என்று சோயப் அக்தர் அதிரடியாக பேசியுள்ளார்.

இது ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இது வெறும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டியல்ல. இது பாகிஸ்தான் மற்றும் ரசிகர்களுக்கு எதிரான போட்டி. இது பாகிஸ்தான் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு எதிரான போட்டி. ஆப்கானிஸ்தான் கத்துக்குட்டியல்ல. வலுவான அணியாக இருக்கிறது. இது மிகவும் முக்கியமான பெரிய போட்டியாகும். அதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நீங்கள் எளிதாக வென்று விட முடியாது”

- Advertisement -

“ஏனெனில் அவர்கள் பாகிஸ்தானுக்கு நிகராக இருக்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் அணியை திணறடிக்கும் அளவுக்கு அவர்களிடம் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களிடமும் சரி மற்ற எதிரணிகளிடமும் சரி தோல்வியை பற்றி பாகிஸ்தான் பயப்படக்கூடாது. மேலும் சென்னை மைதானத்தில் நிறைய அம்சங்கள் ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக செல்லலாம்”

இதையும் படிங்க: உலககோப்பையில் வேறுயெந்த இந்திய பவுலரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்த – முகமது ஷமி

“குறிப்பாக அங்குள்ள ரசிகர்கள், மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பிட்ச் ஆகியவை ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக இருக்கலாம். அங்கே பகல் அல்லது இரவு என எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நிச்சயமாக சுழலுக்கு சாதகமான மைதானம் இருக்கும் என்று நினைக்கிறேன்” என கூறினார். இருப்பினும் 1999இல் இந்தியாவையே தோற்கடித்த போது பாகிஸ்தானுக்கு சென்னை ரசிகர்கள் கைதட்டி பாராட்டியதை அவர் மறந்து விட்டு பேசுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement