உலககோப்பையில் வேறுயெந்த இந்திய பவுலரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்த – முகமது ஷமி

Shami
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் வாய்ப்பு பெறாத இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு நேற்று அக்டோபர் 22-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 21-வது லீக் போட்டியில் இந்த தொடரில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளராக அசத்தலான பார்மில் இருந்தாலும் பின் வரிசையில் பேட்டிங் டெப்த் வேண்டும் என்பதற்காகவே இதுநாள் வரை ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்து விளையாடி வந்தார்.

- Advertisement -

ஆனால் அவரது பந்து வீச்சில் பெரியளவு தாக்கம் இல்லை என்பதற்காக நேற்றைய போட்டியில் அவர் கழட்டி விடப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமி இடம் பிடித்திருந்தார். அப்படி தான் இடம்பெற்று விளையாடிய முதல் போட்டியிலேயே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இப்படி மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் முகமது ஷமியை இந்த உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும் என்ற ஆதரவும் அனைவரது மத்தியிலும் இருந்து அவருக்கு குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அவர் உலகக்கோப்பை போட்டிகளில் வேறுயெந்த இந்திய பவுலரும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டு முறை அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சேர்த்து இதுவரை உலக கோப்பை போட்டிகளில் 5 முறை நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : சத்து கம்மியா இருக்கலாம்,, ப்ரோட்டீன் சாப்பிட்டு சீக்கிரம் அந்த அவமானத்தை உடைப்போம்.. இமாம் வித்யாச பேட்டி

இந்த ஒரு சாதனையை உலகக் கோப்பை போட்டிகளில் வேறுயெந்த இந்திய பவுலரும் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இதுவரை உலக கோப்பை போட்டிகளில் 12 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள முகமது ஷமி 36 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement