சத்து கம்மியா இருக்கலாம்,, ப்ரோட்டீன் சாப்பிட்டு சீக்கிரம் அந்த அவமானத்தை உடைப்போம்.. இமாம் வித்யாச பேட்டி

Imam Ul Haq 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்து அசத்தியது. ஆனால் பரம எதிரி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 191 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்த அந்த அணி உலக கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை பதிவு செய்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக வந்தது.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 10 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை தவற விட்டதால் 163 ரன்களை விளாசிய டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு மற்றுமொரு தோல்வியை பரிசளித்தார். அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

ப்ரோட்டீன் பத்தல:
இவை அனைத்தையும் விட இந்த உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தான் பவர் பிளே ஓவர்களில் ஒரு சிக்சர்கள் அடிக்கவில்லை என்பது ஆச்சரியத்தை கொடுக்கும் புள்ளிவிவரமாக இருந்து வருகிறது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக், பக்கார் ஜமான், பாபர் அசாம் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாமல் திணறுவதால் கிண்டல்களை சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் சாப்பிடுவதாலேயே தங்களுடைய அணி வீரர்கள் சிக்ஸர் அடிக்க தடுமாறுவதாக இமாம்-உல்-ஹக் வேடிக்கையான கருத்தை தெரிவித்துள்ளார். எனவே அதிகமான புரோட்டின் உணவுகளை சாப்பிட்டு விரைவில் அந்த மோசமான அவமானத்தை உடைப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நாங்கள் கார்போ உணவுகளுக்கு பதிலாக அதிகமான புரோட்டின் உணவுகளை சாப்பிட வேண்டும்”

- Advertisement -

“அதைத் தவிர்த்து அதைப் பற்றி நாங்கள் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க முடியவில்லை என்று நாங்கள் வருத்தப்படக்கூடாது. மாறாக அணியாக சேர்ந்து எப்படிபோட்டிகளை வென்று சிறப்பாக செயல்படுகிறோம் என்பதை முக்கியமாகும். துரதிஷ்டவசமாக கடந்த 2 போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்”

இதையும் படிங்க: இந்த நேரத்துல இந்தியாவுக்கு ஒரு தோல்வி வேணும்.. தோனி சொன்ன காரணத்தை பகிர்ந்த ரவி சாஸ்திரி

“ஆனாலும் எங்களுக்கு இன்னும் 5 போட்டிகள் இருக்கிறது. அதில் வென்று நாங்கள் செமி ஃபைனல் சுற்றுக்கு செல்வோம். எனவே அதற்கு நாங்கள் எப்படி தயாராகிறோம் என்பது முக்கியமாகும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் சென்னையில் இருக்கும் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் தரமான ஸ்பின்னர்களை கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய 5வது போட்டியில் பாகிஸ்தான் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement