இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா ஃபிக்சிங் பண்ணாங்களா? சோயப் அக்தர் பதிலடி பேட்டி

Shoaib Akhtar 55
Advertisement

உச்சக்கட்டமாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அதற்கு முந்தைய போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்ததால் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை எளிதாக தோற்கடித்த பாகிஸ்தான் அடுத்த போட்டியில் இந்தியாவிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இதே தொடரில் லீக் சுற்றில் 66/4 என இந்தியாவின் தெறிக்க விட்டதால் அந்த அணி எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதே போல பவுலர்களை சூப்பர் 4 போட்டியில் மிகச்சிறப்பாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக எதிர்கொண்டு வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் இந்தியா மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்ய உதவினர். அதன் காரணமாக ஃபைனலுக்கு செல்வதற்கு இலங்கை எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் பாகிஸ்தான் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

அக்தர் பதிலடி:
அதற்கு முன்பாகவே இலங்கையை எப்படியாவது இந்தியா தோற்கடித்தாக வேண்டும் என்ற பரிதாபத்திற்கும் பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு 213 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பந்து வீச்சிலும் வெல்லாலகே – டீ சில்வா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்த போது வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் கடைசியில் பந்து வீச்சில் அசத்திய இந்தியா எளிதான வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கும் கைகொடுத்துள்ளது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்பதற்காக இலங்கைக்கு எதிராக இந்தியா வேண்டுமென்றே ஃபிக்சிங் செய்து தோற்பதற்காக விளையாடியதாக நிறைய ரசிகர்கள் தமக்கு மெசேஜ் செய்ததாக கூறியுள்ளார். ஆனால் இறுதியில் வென்ற இந்தியா ஏன் ஃபிக்ஸிங் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதாவது இந்தியா பிக்ஸிங் செய்து வேண்டுமென்றே பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்பதற்காக தோற்று நோக்கத்தில் விளையாடியதாக எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தன. நீங்கள் இப்போது நன்றாக இருக்கிறீர்களா? இலங்கை தங்களால் முடிந்த அளவுக்கு பந்து வீச்சில் அசத்தியது. வெல்லாலகே, அசலங்கா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். அதிலும் 20 வயது பையன் 43 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் எடுத்தார்”

இதையும் படிங்க: உச்சம் தொட்ட கில்.. 2018க்குப்பின் ஐசிசி தரவரிசையில் சாதனை – டாப் 10 பட்டியலில் 6 இந்திய வீரர்கள் இடம் பிடித்து அசத்தல்

“அப்போது இந்தியா மற்றும் இன்னும் சில நாடுகளிலிருந்து இந்திய அணி தோற்பதுக்காகவே விளையாடுவதாக எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால் ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் விளையாடிய அவர்கள் ஏன் தோற்க வேண்டும் என்பதை சொல்லுங்கள்? அது தெரியாமல் நீங்கள் கிண்டல்களை செய்கிறீர்கள். அந்த போட்டியில் இந்தியா வெற்றிக்காக மிகச் சிறந்த சண்டை போட்டது. குல்தீப், பும்ரா போன்றவர்கள் குறைந்த இலக்கை கட்டுப்படுத்துவதில் அபாரமாக செயல்பட்டனர். மேலும் வெல்லாலகே போராடியதில் பாதி கூட சாகின் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் டெயில் எண்டர்கள் போராடவில்லை” என்று கூறினார்.

Advertisement