உச்சம் தொட்ட கில்.. 2018க்குப்பின் ஐசிசி தரவரிசையில் சாதனை – டாப் 10 பட்டியலில் 6 இந்திய வீரர்கள் இடம் பிடித்து அசத்தல்

Shubman Gill Siraj Rohit
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா 8வது கோப்பையை வெல்லும் முனைப்பில் லீக் சுற்றை கடந்து சூப்பர் 4 சுற்றிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக 66/4 என சரிந்தும் இஷான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 266 ரன்கள் குவிக்க உதவினார்கள்.

அதிலிருந்து பலவீனமாக இருப்பதாக கருதப்பட்ட மிடில் ஆர்டர் வலுவாக இருப்பது தெரிய வந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பு வீரர்களும் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பெரிய ரன்கள் குவித்து அடுத்தடுத்த வெற்றிகளில் பங்காற்றி நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதை விட ரிஷப் பண்ட் வெளியேறியதால் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று கருதப்பட்ட கேஎல் ராகுலும் ஒரு வழியாக காயத்திலிருந்து குணமடைந்து இத்தொடரில் சதமடித்து சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

தரவரிசையில் உச்சம்:
அதே போல சுப்மன் கில், இஷான் கிசான், ஹர்டிக் பாண்டியா ஆகியோரை போலவே குல்தீப் யாதவ் பெரிய விக்கெட்டுகளை எடுத்து நல்ல ஃபார்மில் இருப்பது தொழில் பந்து வீசித் துறையை வலுப்படுத்தியுள்ளது. மேலும் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் 2023 உலகக் கோப்பையை வெல்ல இந்தியா போராடும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் கடந்த சில மாதங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் 759 புள்ளிகளைப் பெற்று தம்முடைய கேரியரின் உச்சமாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இருக்கும் நிலையில் விராட் கோலி 715 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் ரோகித் சர்மா 707 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் 5 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி டாப் 10 ஒருநாள் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 3 இந்திய வீரர்கள் இடம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர் கடைசியாக கடந்த 2018 ஜனவரியில் ஷிகர் தவான், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய 3 இந்திய வீரர்கள் டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். டாப் 10 ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா 6வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஃபைனல் கனவை நொறுக்க காத்திருக்கும் மழை – இந்தியாவுடன் மோதப்போவது பாகிஸ்தானா – இலங்கையா? விவரம் இதோ

அது போக டாப் 10 பவுலர்கள் பட்டியலில் இந்த ஆசிய கோப்பையில் அமர்க்களமாக செயல்பட்டு வரும் குல்தீப் யாதவ் 656 புள்ளிகளுடன் 7வது முன்னேறியுள்ள நிலையில் முகமது சிராஜ் தொடர்ந்து 643 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறார். இந்த வகையில் 3 வகையான டாப் 10 பட்டியலில் 6 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அத்துடன் அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா (118), பாகிஸ்தானை (118) தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா (116) இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement