ஃபைனல் கனவை நொறுக்க காத்திருக்கும் மழை – இந்தியாவுடன் மோதப்போவது பாகிஸ்தானா – இலங்கையா? விவரம் இதோ

IND vs SL and Pak
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை தம்முடைய முதல் போட்டியிலேயே 238 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்து தெறிக்க விட்ட இந்தியா நேற்று இலங்கைக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 4 போட்டியிலும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக ஆசிய கோப்பையின் ஃபைனலுக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்று அசத்தியுள்ளது.

குறிப்பாக சூப்பர் 4 புள்ளி பட்டியலில் 2 போட்டிகளில் 2 பெரிய வெற்றிகளை பெற்றதால் 4 புள்ளிகளுடன் +2.690 என்ற அதிக ரன் ரேட்டை கொண்டுள்ள இந்தியா மற்ற அணிகளால் தொடங்க முடியாத அளவுக்கு இடத்தை வலுவாக பிடித்து ஃபைனலுக்கு சென்றுள்ளது. மறுபுறம் அதன் காரணமாக தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த வங்கதேசம் கடைசி போட்டியில் இந்தியாவை சந்திப்பதற்கு முன்பாகவே இத்தொடரிலிருந்து 3வது அணியாக வெளியேறியுள்ளது.

- Advertisement -

தயாராகும் மழை:
இதன் காரணமாக இந்தியாவுடன் ஃபைனலில் மோதுவதற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. தற்சமயத்தில் அவ்விரு அணிகளும் 2 போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை பெற்று சமமாக தலா 2 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை 2வது இடத்திலும் (-0.200) பாகிஸ்தான் 3வது இடத்திலும் (-1.892) இருக்கிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி இவ்விரு அணிகள் மோதும் சூப்பர் 4 போட்டியில் வெல்லும் அணி நேரடியாக செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் மாபெரும் ஃபைனலில் விளையாடுவதற்கு தகுதி பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதற்கிடையே மழை கொஞ்சம் விளையாடி பார்ப்பதற்கு தயாராகியுள்ளது தான் இது போட்டியில் மிகப்பெரிய சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இத்தொடரில் இலங்கையில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி போட்டி நடைபெறும் கொழும்பு நகரில் சராசரியாக 90% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை 60% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால் இப்பபோட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தோனி இல்லனா இன்னைக்கு ரோஹித் சர்மா ஹிட்மேனா இந்த உலக சாதனை பண்ணிருக்க முடியாது – கம்பீர் அதிரடி பேட்டி

இருப்பினும் மாலை 5 – 6, இரவு 10 – 11 ஆகிய நேரங்களில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால் முடிந்தளவுக்கு நடுவார்கள் இப்போட்டியை ஓவர்கள் குறைத்து நடத்தி முடிவு காண்பதற்கு முயற்சிப்பார்கள். அதையும் தாண்டி மழை பெய்யும் பட்சத்தில் ரிசர்வ் நாள் இல்லாத காரணத்தால் இரு அணிகளுக்கும் 1 புள்ளி வழங்கப்படும். அந்த சூழ்நிலையில் அதே 3 புள்ளியைப் பெற்றாலும் பாகிஸ்தானை விட அதிக ரன் ரேட் கொண்ட இலங்கை ஃபைனலுக்கு தகுதி பெற்ற விடும். எனவே தங்களுடைய ஃபைனல் கனவை நொறுக்க காத்திருக்கும் மழை இப்போட்டியில் வரக்கூடாது என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

Advertisement