பாகிஸ்தான் அதுக்கு தகுதியானவங்களா.. பெரிய பிளேயர்னு பெயர் மட்டும் போதாது.. பாபரை விமர்சித்த அக்தர்

Shoaib Akhtar 7
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதனால் தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி இந்தியாவுக்கு எதிரான 3வது போட்டியில் 154/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் அதன் பின் சீட்டுக்கட்டு போல சரிந்து 191 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

சொல்லப்போனால் மோசமான வரலாற்றை மாற்றுவோம் என்று சொன்ன பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் சுமாராக செயல்பட்டதால் உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதை விட பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது போட்டியில் வெறும் 10 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை தவறவிட்டதால் 163 ரன்கள் அடித்த வார்னர் பாகிஸ்தானுக்கு மற்றுமொரு தோல்வியை பரிசளித்தார்.

- Advertisement -

அக்தர் விமர்சனம்:
அதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு சரிந்துள்ள பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்று சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பெரிய பெயரை கொண்டுள்ள பாபர் அசாம் அதற்கு தகுந்தார் போல் கேப்டனாக பெரிய இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“பாபர் அசாம் கிரேட் பிளேயர். ஆனால் நீங்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். பெரிய அணிகளுக்கு எதிராக நீங்கள் பெரிய ரன்கள் அடிக்காமல் எப்போதும் பெரிய பெயர் எடுக்க முடியாது. ஒருவேளை நீங்கள் பெரிய வீரர் என்பதை நிரூபிக்க விரும்பினால் அதற்கு பெரிய அணிகளுக்கு எதிராக பெரிய ரன்கள் அடிங்கள். நீங்கள் நம்பிக்கை இழக்காமல் விளையாட வேண்டும். மேலும் கேப்டனாக நீங்கள் இப்திகார் அகமதை முதலாவதாக பந்து வீச்சில் மாற்ற செய்வதற்காக கொண்டு வந்தது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது”

- Advertisement -

“உசாமா மிர் கேட்ச் விட்டார். இந்த சமயத்தில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது? ஏனெனில் செமி ஃபைனல் வாய்ப்பு குறைந்து வருகிறது. இன்னும் நீங்கள் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டும். முதலில் பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்வதற்கு தகுதியானவர்களா? என்ற கேள்வி எனக்கே வருகிறது. ஏனெனில் மொத்தமாக ஏமாற்றமான செயல்பாடுகளை பார்க்கிறோம்”

இதையும் படிங்க: ஹர்டிக் பாண்டியாவோடு சேர்த்து மேலும் ஒரு இந்திய வீரருக்கு காயம் – வெளியான அறிவிப்பு

“அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானும் வலுவான அணியாக இருக்கிறது. நீங்கள் அதில் அவமானத்தை தவிர்க்க வேண்டுமெனில் அவர்களை மதிப்பிடக் கூடாது. ஏனெனில் சென்னையில் இருக்கும் சுழல் ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக இருக்கலாம். எனவே அப்போட்டியில் இதயத்திலிருந்து முழு திறமையை வெளிப்படுத்தி பாகிஸ்தான் விளையாடும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement