ஹர்டிக் பாண்டியாவோடு சேர்த்து மேலும் ஒரு இந்திய வீரருக்கு காயம் – வெளியான அறிவிப்பு

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி தங்களது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நாளை அக்டோபர் 22-ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் போது காயமடைந்த ஹார்டிக் பாண்டியா நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் ஹார்டிக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹார்டிக் பாண்டியாவின் இடத்திலேயே மாற்று வீரராக இடம்பெறப்போவது யார்? என்பது குறித்த கேள்வி அதிகரித்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு முக்கிய ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலேயே காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த ஜடேஜா ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டிருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே அறுவைசிகிச்சை பெற்றுக்கொண்ட இடத்திலேயே தற்போது மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளதால் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிசிசிஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் : ஜடேஜா தற்போது நலமுடன் இருக்கிறார். அவரது முழங்காலில் ஏற்பட்ட வலிக்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. அந்த இடத்தில் ஏற்படும் வலி குறித்து தற்போது தொடர்ச்சியாக கண்காணிப்பு நிகழ்ந்து வருகிறது.’

இதையும் படிங்க : 399 ரன்கள்.. அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா.. இங்கிலாந்துக்கு எதிராக புதிய உலக சாதனை

போட்டியின் போது ஏற்பட்ட வலிக்காக தான் அவர் ஐஸ் பேக்கை பயன்படுத்தினார். அது தவிர்த்து அவரது காயம் குறித்து பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருமே மருத்துவக் குழுவின் கண்காணிப்பின் கீழ் உள்ளனர். எனவே வீரர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டால் நிச்சயம் சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்த திட்டம் உள்ளது. ஜடேஜா குறித்து பெரிய அளவில் யோசிக்க தேவையில்லை. அவர் நிச்சயம் தேவை என்றால் விளையாடுவார் இல்லையென்றால் ஓய்வு எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement