399 ரன்கள்.. அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா.. இங்கிலாந்துக்கு எதிராக புதிய உலக சாதனை

ENg vs RSA.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பையில் 2023 அக்டோபர் 21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 20வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளுமே களமிறங்கிய நிலைமையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் ஆரம்பத்திலேயே 4 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரீசா ஹென்றிக்ஸ் உடன் அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாடிய வேன் டெர் டுஷன் 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரியுடன் 60 (61) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிக்ஸ் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 85 (75) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

தென்னாபிரிக்கா உலக சாதனை:
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஐடன் மார்க்ரம் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 42 (44) ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லரும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து மறுபுறம் ஹென்றிச் கிளாஸின் மிடில் ஓவர்களில் இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த மார்கோ யான்சென் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறினார். நேரம் செல்ல செல்ல டெத் ஓவர்களில் வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்கா 350 ரன்கள் தாண்டுவதற்கு உதவிய போது கிளாசின் 12 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 109 (67) ரன்கள் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் வெறும் 35 பந்துகளில் 50 ரன்கள் கடந்து மிரட்டிய யான்சன் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 75* (42) ரன்கள் குவித்து சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் 399/7 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டில் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த அணி என்ற நியூஸிலாந்தின் 8 வருட சாதனையை உடைத்த தென்னாப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்தது.

இதையும் படிங்க: இவ்ளோ பெரிய தண்டனைய பாத்ததில்லை.. அடுத்ததா ஆப்கன் என்ன செய்யப்போறாங்களோ.. ரமீஸ் ராஜா கவலை

இதற்கு முன் கடந்த 2015 உலக கோப்பையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து 398/5 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். மறுபுறம் கடைசி 9 ஓவரில் 135 ரன்களை வாரி வழங்கிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லீ 3 விக்கெட்டுகளும் கஸ் அட்கின்ஷன் மற்றும் அடில் ரசித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் வான்கடே மைதானத்தில் இந்த பெரிய இலக்கை சேசிங் செய்து சாதனை படைக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

Advertisement