இவ்ளோ பெரிய தண்டனைய பாத்ததில்லை.. அடுத்ததா ஆப்கன் சம்பவம் செய்யப்போறாங்க.. ரமீஸ் ராஜா கவலை

Ramiz Raza 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இதுவரை சந்தித்த 4 போட்டிகளில் தலா 2 வெற்றி தோல்விகளை பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவில் விளையாடும் அந்த அணி தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்தது.

ஆனால் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில் 154/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி அதன் பின் சீட்டுக்கட்டு போல சரிந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் வரலாற்றை மாற்றுவோம் என்று சொன்ன அந்த அணியினர் உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அடுத்து ஆப்கானிஸ்தான்:
அதை விட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது போட்டியில் வெறும் 10 ரன்களில் இருந்த போது கொடுத்த அல்வா கேட்ச்சை தவற விட்டதால் 163 ரன்களை அடித்து நொறுக்கிய டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு 4வது தோல்வியை பரிசளித்தார். அதனால் புள்ளிப்பட்டியலில் கடந்த வாரம் கடைசி இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 4வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் பாகிஸ்தான் 5வது இடத்திற்கு சரிந்துள்ளதால் செமி ஃபைனல் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தங்களுடைய அடுத்த போட்டியில் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கு சற்று அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஒரு கேட்ச் விட்டதற்காக வார்னர் போல யாரும் இவ்வளவு அடித்து நொறுக்கியதை பார்த்ததில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கிரிக்கெட்டில் ஒரு கேட்ச் விட்டதற்காக ஒரு வீரர் போட்டி முழுவதும் அடித்து நொறுக்கிய இது போன்ற நிகழ்வு அரிதாக நடைபெறக்கூடியதாகும். உஷாமா மிர் மிகவும் எளிதான கேட்சை தவற விட்டார். அப்போது 10 ரன்னில் இருந்த வார்னர் 163 ரன்களை அடித்தார். இப்படி ஒரு கேட்ச் விட்ட பின் ஒருவர் இவ்வளவு ரன்கள் அடித்ததை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அங்கிருந்து போட்டியின் நிலைமையும் மாறி விட்டது”

இதையும் படிங்க: அவர் பேட்டிங்கை பாத்தா ஹெய்டன், கில்கிறிஸ்ட் தான் நியாபகம் வராங்க.. ஓப்பனாக பாராட்டிய சோயப் மாலிக்

“இதிலிருந்து திரும்பி வெற்றி காண்பது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமாகும். குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சுழலுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் சுமாராக இருப்பதால் வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை அங்கே சுழலுக்கு சாதகமான மைதானம் இருந்தால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கு சற்று அதிக வாய்ப்பு இருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement