அவர் பேட்டிங்கை பாத்தா ஹெய்டன், கில்கிறிஸ்ட் தான் நியாபகம் வராங்க.. ஓப்பனாக பாராட்டிய சோயப் மாலிக்

Shoaib Malik
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா தங்களுடைய முதல் 4 போட்டிகளில் 4 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. அதனால் செமி ஃபைனல் வாய்ப்பு பிரகாசமாகி வருவதால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ஏனெனில் தற்போதைய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

மாலிக் பாராட்டு:
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா பவர் பிளே ஓவர்களிலேயே எதிரணி பவுலர்களைப் பந்தாடி அதிரடியான துவக்கத்தை கொடுத்து இந்தியாவின் வெற்றிகளுக்கு அடித்தளமிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்றளவுக்கு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு எதிராக முறையே 131, 86, 48 ரன்களை 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

இந்நிலையில் ரோகித் சர்மா விளையாடுவதை பார்ப்பது ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்தியூ ஹெய்டன் ஆகியோரை தமக்கு நினைவுபடுத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்காக மேத்தியூ ஹெய்டன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் விளையாடியதை ரோகித் சர்மா எனக்கு நினைவுபடுத்துகிறார்”

- Advertisement -

“ஏனெனில் அவர்கள் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய அற்புதமான துவக்கத்தை கொடுப்பார்கள். அதை பயன்படுத்தி 3வது இடத்தில் ரிக்கி பாண்டிங் பவுலர்களை வெளுத்து வாங்கி பெரிய ரன்கள் அடிப்பார். ரோகித் சர்மாவை பற்றிய சிறந்த விஷயம் என்னவெனில் அவர் அதிக பவருடன் நிறைய சிக்சர்களை அடித்து தம்முடைய பேட்டிங்கில் தொடர்ந்து முன்னேறி வருகிறார். இது மிகவும் முக்கியமாகும்”

இதையும் படிங்க: அவர் பேட்டிங்கை பாத்தா ஹெய்டன், கில்கிறிஸ்ட் தான் நியாபகம் வராங்க.. ஓப்பனாக பாராட்டிய சோயப் மாலிக்

“அதனால் தான் அவர் உலகக் கோப்பை வரலாற்றில் 7 சதங்களையும் அடித்துள்ளார். மேலும் 10 ஓவர்கள் முடிந்தவுடன் ஃபீல்டர்கள் பரவி சென்று நிற்கும் போது அதற்கேற்றார்கள் ரோஹித் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொண்டு விளையாடுகிறார்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் இந்தியா தன்னுடைய 5வது போட்டியில் மிகவும் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் 2019 உலகக் கோப்பை ஃபைனல் உட்பட தொடர்ந்து ஐசிசி தொடர்களில் தோல்வியை பரிசளித்து வரும் நியூசிலாந்தை இம்முறை தோற்கடிக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

Advertisement