சரியான பிராக்டீஸ் குடுங்க. அந்த பையன் பெரிய ஆளா வருவான். இந்திய இளம்வீரரை பாராட்டிய – சோயிப் அக்தர்

Shoaib Akhtar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்திய அணியானது தங்களது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபாரமாக இந்த தொடரை துவங்கியது. அதன் பின்னர் ஹாங்காங் அணியையும் வீழ்த்திய இந்திய அணி “சூப்பர் 4” சுற்றிற்கு மிகப்பெரிய பலம்வாய்ந்த அணியாக முன்னேறியது.

IND vs SL

- Advertisement -

பிரமாதமான ஆட்டங்களை அடுத்தடுத்து வழங்கியதால் நிச்சயம் இம்முறையும் இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் “சூப்பர் 4” சுற்றில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடனும் அதற்கு அடுத்த போட்டியில் இலங்கை அணியுடனும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து இந்த ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை இந்திய அணி பெற்று இருந்தாலும் இந்த ஆறுதல் வெற்றியோடு நாடு திரும்பி உள்ளது. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னர் இந்த ஆசிய கோப்பை தொடர் மிகப் பெரிய தொடராக பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு சற்று அதிருப்தி அளிக்கும் வகையிலேயே இருந்தது என்றே கூறலாம்.

Arshdeep Singh

அதே போன்று பந்துவீச்சில் இன்னும் இந்திய அணி முழுமையாக செட்டாகவில்லை என்பது ஆசியக் கோப்பை தொடரிலேயே பெருமளவு வெளிப்பட்டதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆசியக் கோப்பை தொடரில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அரஷ்தீப் சிங் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

அர்ஷ்தீப் சிங் தவறவிட்ட ஒரு கேட்ச் காரணமாக அவர் மீது பெரிய அளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அதெல்லாம் தேவையில்லாத ஒன்று. ஏனெனில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருமே அவர்களது கரியரில் முக்கியமான போட்டிகளில் சில தவறுகளை செய்திருப்பார்கள். அதேபோன்றுதான் அரஷ்தீப் சிங்கும் அந்த தவறை செய்துவிட்டார். அதனால் அவர் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.

இதையும் படிங்க : PAK vs AFG : களத்தில் மோதிக்கொண்ட வீரர்களின் விவகாரம். தண்டனை வழங்கி – அதிரடி காட்டிய ஐ.சி.சி

ஏனெனில் இந்திய அணிக்காக அவர் வீசிய அனைத்து ஓவர்களுமே மிகச்சிறப்பாக இருந்தது. அதோடு எந்த இடத்திலும் அவர் மிக நேர்த்தியாக பந்து வீசுகிறார். அவரிடம் இருக்கும் திறமைக்கு இன்னும் அவருக்கு ஸ்பெஷல் பயிற்சி அளித்து அவரை வளர்த்தால் நிச்சயம் ஒரு ஸ்பெஷல் டேலண்டாக அவர் இந்திய அணிக்காக உருவாவார் என அக்தர் தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement