PAK vs AFG : களத்தில் மோதிக்கொண்ட வீரர்களின் விவகாரம். தண்டனை வழங்கி – அதிரடி காட்டிய ஐ.சி.சி

Asif-ali
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷார்ஜா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான “சூப்பர் 4” சுற்று போட்டி நடைபெற்றது. அந்த “சூப்பர் 4” சுற்றின் மிக முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் குவித்தது.

Farooqi

- Advertisement -

பின்னர் 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடுமையான போராட்டத்திற்கு பிறகு கடைசி ஓவரில் 19.2 என்கிற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து போராடி 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் சென்ற ஆப்கானிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றியை தாரை வார்த்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நடந்த ஒரு சம்பவம் அப்போதே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி ஆப்கானிஸ்தான் பவுலரான பரீத் அகமது வீசிய பந்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆசிப் அலி சிக்ஸர் ஒன்றினை அடித்தார். அதற்கு அடுத்த பந்திலேயே மீண்டும் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்ட ஆசிப் அலி கேட்சாகி ஆட்டம் இழந்தார். போட்டியின் முக்கியமான நேரத்தில் பெரிய விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஃபரீத் அகமது அவரை நோக்கி ஆக்ரோஷமாக அந்த விக்கெட்டை கொண்டாடினார்.

Asif Ali

இதனால் கடுப்பான பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆசிப் அலி அவரை பேட்டால் தாக்க முயன்றார். இந்த விவகாரம் அப்போது பெரிய அளவில் பரபரப்பானது. அதோடு அம்பயர்கள் மற்றும் சக வீரர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். அதன் பிறகு போட்டி முடிந்து தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இருக்கைகள் மற்றும் பொருட்களை எடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் மீது வீசியதும் பெருமளவு வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஐசிசி தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் : ஆசிப் அலி நடத்தை விதி 2.16 விதிமுறையை மீறி உள்ளார். அதாவது போட்டியின் போது ஆபாசமான வார்த்தையை பிரயோகிப்பது, புண்படுத்தும் வகையில் பேசுவது, அவமதிக்கும் சைகை செய்வது போன்ற செயலை செய்துள்ளார். அதேபோன்று பரீத் அகமது நடத்தை விதி 2.1 விதிமுறையை மீறியுள்ளார்.

இதையும் படிங்க : ஜடேஜா காயமடைந்தது இப்படிதான், அணி நிர்வாகத்தின் தவறான அலட்சிய போக்கு மீது – பிசிசிஐ கோபம்

அதன்படி சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர் அல்லது நடுவர் அல்லது வேறு எந்த நபருடன் பொருத்தமற்ற உடல் தொடர்பு விதியை மீறியதும் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இரண்டு வீரர்களுக்குமே போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் இருவருக்குமே ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் ஐசிசி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement