ஜடேஜா காயமடைந்தது இப்படிதான், அணி நிர்வாகத்தின் தவறான அலட்சிய போக்கு மீது – பிசிசிஐ கோபம்

Ravindra Jadeja
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை தொடரில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் நடப்புச் சாம்பியனாகவும் களமிறங்கிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்பியது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இத்தனைக்கும் கடந்த டி20 உலககோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் இதுவரை பங்கேற்ற சாதாரண இருதரப்பு தொடர்களில் வழக்கம்போல சக்கை போடு போட்ட இந்தியா 6 அணிகள் பங்கேற்ற இந்த பெரிய தொடரில் மீண்டும் முக்கிய நேரங்களில் சொதப்பி முதல் முறையாக தோற்று அதே பழைய பஞ்சாங்கத்தை பேசியுள்ளது.

Ravindra Jadeja Hardik Pandya

- Advertisement -

இதனால் ஆசிய கோப்பையிலேயே மண்ணைக் கவ்விய இந்த அணி எங்கே ஆஸ்திரேலியாவுக்குச் சென்று டி20 உலகக் கோப்பையை வெல்லப் போகிறது என்ற கவலையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரில் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைவதற்கு சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அதுவரை வெற்றி நடைபோட்ட இந்திய அணியில் அவர் காயத்தால் வெளியேறியதால் செய்யப்பட்ட 3 மாற்றங்களில் இருந்து தான் தோல்விகள் துவங்கியது என்றே கூறலாம்.

அலட்சியமான காயம்:
கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பின் பேட்டிங்கில் மிகப்பெரிய எழுச்சி கண்ட ரவீந்திர ஜடேஜா 3 வகையான இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமாக செயல்பட்டு உலக அளவில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக அவதரித்தார். ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பார்மை இழந்து காயத்தால் வெளியேறிய அவர் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் விரைவாக குணமடைந்து இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் கம்பேக் கொடுத்த அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி மீண்டும் தன்னுடைய முக்கியத்துவத்தை நிரூபித்தார்.

jadeja 1

ஆனால் மீண்டும் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ள அவர் டி20 உலக கோப்பையில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளதால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலையில் அதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு ஆயத்தமாகி வருகிறது. அதற்காக முக்கிய வீரரான ஜடேஜாவின் காயம் எப்போது குணமடையும், எப்படி காயமடைந்தார் என்ற தகவலை பிசிசிஐ சார்பில் தேர்வுக்குழு கேட்டபோது தான் அணி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு அம்பலமாகியுள்ளது.

- Advertisement -

அதாவது துபாயில் நடைபெறும் இந்த தொடரில் லீக் சுற்று முடிந்தவுடன் புத்துணர்ச்சி அடைவதற்காக இந்திய வீரர்கள் நீச்சல் குளத்தில் குளிர்ச்சியடைய அணி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அப்போது அலைகளில் சறுக்கி விளையாடும் படகில் பயணிக்க முயற்சித்த ஜடேஜா தட்டுத் தடுமாறி கீழே விழ முயற்சித்ததாலேயே காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படி துரதிர்ஷ்டவசமாக சந்தித்த காயம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு கொண்டு சென்றதால் அதிருப்தியடைந்துள்ள பிசிசிஐ அவரைப் போன்ற முக்கிய வீரரை இப்படி தேவையற்ற காரணத்துக்காக இழந்ததால் அணி நிர்வாகத்தை சாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

IND

ஏனெனில் இந்திய வீரர்கள் புத்துணர்ச்சியடைய நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்ற திட்டம் பிசிசிஐ ஏற்கனவே வகுத்து கொடுத்திருந்த திட்டத்தில் இல்லை என்றும் அணி நிர்வாகம் தன்னிச்சையாக அந்த முடிவை எடுத்ததாகவும் தெரிய வருகிறது. இது பற்றி வெளியான செய்தி குறிப்பில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அலையில் சறுக்கி சாகச பயணம் மேற்கொள்ளும் போது தடுமாறிய ஜடேஜா தன்னைத்தானே பேலன்ஸ் செய்யும் போது காயமடைந்தார். ஆனால் நாங்கள் கொடுத்து அனுப்பிய கால அட்டவணையில் அப்படி ஒரு நிகழ்ச்சிக்கான திட்டமே இல்லாததால் அது தேவையற்ற ஒன்றாகும். அதனால் தனது முழங்கால்களை பிசைத்துக்கொண்ட அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையை சந்தித்துள்ளார்”

இதையும் படிங்க : IND vs AFG : 4 ஓவர்களில் 5 விக்கெட் எடுத்து அசத்த இதுவே காரணம் – புவனேஷ்வர் குமார் மகிழ்ச்சி

“ஆனால் இப்படி ஒரு காரணத்துக்காக ஜடேஜா காயத்தால் வெளியேறியதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எந்த கோபத்தையும் வெளிப்படுத்தாதது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும் அந்த மொத்த திட்டத்தை பற்றி ராகுல் டிராவிட் கேள்வி கேட்பார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இதனால் தற்போது ஜடேஜா இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பயணிக்க வேண்டியுள்ள நேரம் உருவாகியுள்ளது” என்று கூறினார்.

Advertisement