IND vs AFG : 4 ஓவர்களில் 5 விக்கெட் எடுத்து அசத்த இதுவே காரணம் – புவனேஷ்வர் குமார் மகிழ்ச்சி

Bhuvneshwar-Kumar-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற “சூப்பர் 4” சுற்றின் ஐந்தாவது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் துவக்க வீரராக களம் இறங்கிய இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி 61 பந்துகளில் ஆறு சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரி என 122 ரன்கள் குவித்து அசத்தினார்.

Virat Kohli

- Advertisement -

பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது புவனேஸ்வர் குமாரின் சிறப்பான பந்துவிச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே குவித்து 101 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக நான்கு ஓவர்கள் வீசிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஒரு மெய்டன் உட்பட நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது. அதில் நான்கு விக்கெட்டுகளை புவனேஸ்வர்குமார் வீழ்த்தி அசத்தினார்.

Bhuvneshwar Kumar

புவனேஸ்வர் குமார் இந்த ஆசிய கோப்பை தொடரில் ஓரளவு சுமாராக வீசி வந்த வேளையில் நேற்றைய போட்டியில் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் தனது பந்துவீச்சு குறித்து கூறுகையில் : இன்றைய நாள் எனக்கான நாளாக அமைந்தது. அதனாலயே நான் பவர்பிளே ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.

- Advertisement -

பொதுவாகவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகாது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் பந்து மிகவும் ஸ்விங் ஆகியது. எனக்கு பந்தில் ஸ்விங் கிடைத்தால் நிச்சயம் நான் எங்கு பந்து வீசினாலும் விக்கெட்டுகளை வீழ்த்துவேன். அந்த வகையில் எனக்கு இன்றைய போட்டியில் நிறைய விக்கெட் கிடைத்தன. கடைசி இரண்டு போட்டிகளில் நான் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசவில்லை. அதில் எனக்கு தேவைப்பட்ட அளவு பந்தில் ஸ்விங் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : அவருக்கு பதிலா நான் பெஞ்சில் உட்காரட்டுமா, செய்தியாளரின் கேள்விக்கு ராகுல் காட்டமான பதில் – முழுவிவரம் இதோ

ஆனால் இன்றைய போட்டியில் எதிர்பார்க்காத அளவிற்கு நிறைய ஸ்விங் கிடைத்தது. அதனாலேயே எனக்கு விக்கெட்டுகள் கிடைத்தன. தீபக் சாகர் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்து மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஒட்டுமொத்தமாக இது எங்களுக்கு மிகச் சிறந்த தொடராகவே அமைந்தது. எதிர்வரும் உலக கோப்பைக்கு இந்த தொடர் எங்களுக்கு மிகவும் உதவி புரியும் என புவனேஸ்வர் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement