உங்களுக்கு கூட கோபம் வருமா? – டிராவிட் முதல் முறையாக கோபமடைந்த தருணத்தை பகிரும் பாக் வீரர்

Dravid-1
Advertisement

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பூமியைப் போல் களத்தில் பொறுமையாக நங்கூரமாக நின்று பேட்டிங் செய்வதில் வல்லவர். எப்பேர்ப்பட்ட உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எவ்வளவு தூரத்திலிருந்து ஓடிவந்து பந்து வீசினாலும் அப்படியே அசால்டாக தடுத்து நிறுத்தி பவுலர்கள் களைப்படைய வைத்து ரன்களைக் குவித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் அவர் தனக்கென்று ஒரு ஸ்டைலை வைத்துள்ளார். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000+ ரன்களை குவித்து தம்மால் அதிரடியாகவும் சூழலுக்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்ய முடியும் எனவும் நிரூபித்துள்ளார்.

Dravid 1

வரலாற்றில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் அவர் ஓய்வுக்கு பின்னும் கடந்த 2016 முதல் அண்டர்-19 இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் தேசிய கிரிக்கெட் அகடமியில் இயக்குனராகவும் செயல்பட்டு இந்தியாவின் வலுவான அடுத்த தலைமுறையை உருவாக்கி வந்தார். அதன்பின் கடந்த 2021 நவம்பர் முதல் சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்திய கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்து அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். அதனாலேயே அவர் மீது ரசிகர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது எனலாம்.

- Advertisement -

சாதுவான டிராவிட்:
அத்துடன் தனது பேட்டிங்கை போலவே களத்தில் பெரும்பாலான தருணங்களில் அவர் எப்போதும் பொறுமையாகவும் மென்மையானவராகவும் ட்ராவிட் நடந்து கொள்வார். அதிலும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு வீரர்கள் வேண்டுமென்றே ஸ்லெட்ஜிங் செய்து கவனத்தை சீர்குலைக்க முயன்றாலும் அதற்கு வளைந்து கொடுக்காமல் கோபப்படாமல் செயல்படுவது டிராவிட்டின் மற்றொரு குணமாகும். இருப்பினும் எதற்கும் ஒரு எல்லை உண்டு என்ற வகையில் தன்னுடைய கேரியரில் சில தருணங்களில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற வகையில் அவர் கோபப்பட்ட நிகழ்வுகளும் உள்ளது.

அந்த வகையில் கடந்த 2004இல் முதல் முறையாக ராகுல் டிராவிட் கோபப்பட்டதை பார்த்ததாக முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தற்போது தெரிவித்துள்ளார். பொதுவாகவே சச்சின், டிராவிட் போன்றவர்களை அவுட் செய்வதற்காக வேண்டுமென்றே அதிரடியான வேகத்தில் பந்து வீசும் சோயப் அக்தர் கடந்த 2004இல் நடைபெற்ற ஒரு ஒருநாள் போட்டியின் போது நடைபெற்ற அந்த நிகழ்வை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பகிர்ந்து பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“அவரைப்போன்ற கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் முதல் முறையாக கோபப்படுவதை அப்போதுதான் பார்த்தேன். அந்தப் போட்டியில் அவர் என்னுடன் ஸ்லெட்ஜிங் செய்ய விரும்பினார். ஏனெனில் நாங்கள் இருவரும் ஓடிய போது எதிர்பாராத வகையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டோம். அதற்கு முன்பாக பந்துவீச வந்த போது குறுக்கே வந்த முகமது கைஃப் நகர்ந்து கொண்டார். அதனால் கோபப்பட்ட நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அந்த கோபத்திலேயே பந்துவீசிய நான் முகமது கைப் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை அவுட் செய்தேன்”

Akhtar

“அதனால் அந்தப் போட்டியில் நாங்கள் வெற்றியின் அருகே சென்றபோது ஒரு தருணத்தில் ராகுல் டிராவிட் எனது அருகில் ஓடி வந்தார். அப்போது நான் நீங்கள் உங்களது வழியில் ஓடுங்கள் நான் எனது வழியில் ஓடுகிறேன் என்று அவரிடம் கூறினேன். அதற்காக அவர் கோபப்பட்டு என்னை முறைத்துப் பார்த்தார். அதைப்பார்த்த நான் “ராகுல் எதற்காக நீங்கள் கோபப்படுகிறீர்கள்? தற்போது வானிலை சூடாக இருப்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்களும் கோபப்பட்டு சண்டைபோடுவீர்களா என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என அவரிடம் பதிலளித்தேன்” என்று கூறினார்.

- Advertisement -

ஜென்டில்மேன் டிராவிட்:
கடந்த 2003 உலக கோப்பைக்கு பின் சொந்த மண்ணில் நடைபெற்ற அந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால் அதிகப்படியான வேகத்தில் பந்து வீசியதாக சோயப் அக்தர் கூறினார். அந்த தொடரில் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுத்த அவர் ராகுல் டிராவிட் எப்போதுமே ஜென்டில்மேன் என்றும் பாராட்டினார்.

இதையும் படிங்க : ENG vs RSA : சொன்னதை செய்து காட்டிய தெ.ஆ – இங்கிலாந்தை நொறுக்கி மாஸ் வெற்றி, குவியும் வாழ்த்துக்கள்

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ராகுல் டிராவிட் ஒரு ஜென்டில்மேன் ஆவார். அந்த போட்டியில் நான் மிகவும் அதிவேகமாக பந்து வீசினார். ஏனெனில் 2003 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்திய எதிரணி பவுலராக நான் உருவானேன். 2003 உலகக் கோப்பைக்கு பின் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் எப்போதும் வேகமாக பந்து வீச வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டேன்” எனக் கூறினார்.

Advertisement