CWC 2023 : வாவ் இந்தியா என்னா கம்பேக்.. பிசுரு இல்லாம ஆடுன அவர் கம்ப்ளீட் பிளேயர்.. அக்தர் பாராட்டு

Shoaib Akhtar
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சென்னையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயித்த 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா, இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 2/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியாவின் தோல்வி உறுதி என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தார்கள். அதில் விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கேஎல் ராகுல் கடைசி வரை அவுட்டாகாமல் 97 ரன்கள் குவித்து சிக்சருடன் ஃபினிசிங் செய்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அக்தர் பாராட்டு:
அந்த வகையில் இந்தியா அசாத்தியமான வெற்றியை பெற்றதை பார்த்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் “ஒரு போட்டியில் நீங்கள் இவ்வாறு தான் கம்பேக் கொடுக்க வேண்டும். வாவ்” என்று ட்விட்டரில் மனதார பாராட்டியுள்ளார். அதை விட மார்ஷ் விட்ட கேட்ச் பயன்படுத்தி விராட் கோலி சிறப்பாக விளையாடியதை விட எதிரணிக்கு கொஞ்சம் கூட வாய்ப்பு கொடுக்காமல் கேஎல் ராகுல் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

அத்துடன் 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங்கிலும் அசத்திய ராகுல் ஒரு முழுமையான வீரர் என்றும் பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் விளையாடிய விதம் அவர் வேறொரு இடத்தில் விளையாடுவது போல் இருந்தது. விராட் கோலியும் சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். ஆனால் அவரால் வாய்ப்பு கொடுக்காமல் விளையாட முடியவில்லை”

- Advertisement -

“மறுபுறம் கேஎல் ராகுல் தன்னுடைய இன்னிங்ஸ் முழுவதும் எதிரணிக்கு எவ்விதமான வாய்ப்பும் கொடுக்காமல் விளையாடினார். மேலும் தேவைப்படும் போதெல்லாம் சிறந்த ஷாட்களை அடித்த அவர் அழுத்தத்தை முற்றிலுமாக உடைத்தார். அதே சமயம் விராட் கோலியின் கேட்ச்சை ஆஸ்திரேலியா தவற விட்டது போட்டியின் திருப்பு முனை என்றாலும் ராகுலின் நிலைத்தன்மை முக்கியமாக இருந்தது. மேலும் அவரை நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட வைக்கலாம்”

இதையும் படிங்க: உலககோப்பை வரலாற்றில் 2 ஆவது அணியாக நெதர்லாந்து படைத்த மாபெரும் சாதனை – விவரம் இதோ

“அது போக 50 ஓவர்கள் அவர் விக்கெட் கீப்பிங் செய்ததையும் மறந்து விடாதீர்கள். எப்போதும் வேகமாக ஓடுவதற்காக விராட் கோலியின் ஃபிட்னஸை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால் அவருக்கு நிகரான வேகத்தில் ஓடி விக்கெட் கீப்பிங்கிலும் அசத்திய ராகுல் இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டும். மொத்தத்தில் முழுமையான வீரரான அவருக்கு இன்னும் அதிக ஆதரவு கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement